தேர்தல் களத்தில் வெற்றி யாருக்கு? நாளை மாலை வெளியாகும் கருத்துக் கணிப்பு.. தமிழகத்தில் நிலவரம் என்ன?

Exit Poll: மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

தேர்தல் களத்தில் வெற்றி யாருக்கு? நாளை மாலை வெளியாகும் கருத்துக் கணிப்பு.. தமிழகத்தில் நிலவரம் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

28 Apr 2026 22:03 PM

 IST

ஏப்ரல் 28, 2026: இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் கருத்துக்கணிப்புகள்:

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என இரண்டு வகையான கணிப்புகள் உள்ளன. பொதுவாக, கருத்துக்கணிப்பு என்பது மக்கள் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை கணிக்கும் ஒரு ஆய்வாகும். பல்வேறு நிறுவனங்கள் இதில் பங்கேற்று தங்களது கணிப்புகளை வெளியிடுகின்றன.

மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மேலும் படிக்க: பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நாளை மாலை வெளியாகும் கருத்துக்கணிப்புகள்:

இந்த நிலையில், நாளை மாலை கருத்துக்கணிப்புகள் வெளியாகும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு, வாக்காளர்களின் தற்போதைய மனநிலை, வாக்குறுதிகள் மற்றும் பிரச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது.

மேலும் படிக்க: மே. 4ஆம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கை.. நாளை தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி..

பொதுவாக, கருத்துக்கணிப்புகள் 100% துல்லியமானவை அல்ல. சில நேரங்களில் தவறுகளும் ஏற்படலாம். எனவே, இது ஒரு தோராயமான கணிப்பு மட்டுமே.

நாளை மாலை 6:30 மணிக்கு பல்வேறு நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட உள்ளன. தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து உடனுக்குடன் தகவல்களை அறிய tv9 நெட்வொர்க்கை தொடர்ந்து பாருங்கள்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..