கேஸ் சிலிண்டர் காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது.. முக்கிய அதிகாரி தகவல்!

LPG Gas Cylinder Delivery Duration | மேற்கு ஆசியா போர் காரணமாக கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்காக கால அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டருக்கு காத்திருப்பதற்கான காலம் 5 நாட்களுக்கு குறைவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேஸ் சிலிண்டர் காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது.. முக்கிய அதிகாரி தகவல்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

29 Apr 2026 14:34 PM

 IST

சென்னை, ஏப்ரல் 29 : தமிழகத்தின் (Tamil Nadu) பெரும்பாலான பகுதிகளில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) விநியோகத்துக்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவானதாக மாற்றப்பட்டுள்ளது. விநியோக கால அளவை மேலும் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கேஸ் சிலிணடர் காத்திருப்பு காலம்  குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முழு விநியோக சங்கிலியும் தடையின்றி செயல்படுகிறது

இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் நேற்று (ஏப்ரல் 28, 2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் எண்ணெய் சந்தை படுத்தும் நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பிசி உள்ளிட்ட பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. எந்த வித பதற்றமும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஆதார் கார்டை பிறந்த தேதி சான்றாக பயன்படுத்த முடியுமா?.. UIDAI கூறுவது என்ன?

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முதல் முனையங்கள், கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வரை முழு விநியோக சங்கிலியும் தடையின்றி செயல்படுகிறது என்று கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தடையின்றி விநியோகம் உறுதி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

5 நாட்களாக குறைக்கப்பட்ட காத்திருப்பு காலம்

எண்ணெய் சந்தைபடுத்தும் நிறுவனங்களின் தொடர் முயற்சி, தமிழக அரசின் தீவிர கண்காணிப்பு ஆகியவற்றால் பெரும்பாலான பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்துக்கான காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். விநியோகத்துக்கான கால அளவை மேலும் குறைப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க : பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!

ஆட்டோ எல்பிஜி தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்காக கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, மத்திய அரசு கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கால அளவை மாற்றி அமைத்த நிலையில், சிலிண்டர்கள் கிடைப்பதில் நீடித்து வந்த சிக்கல் சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..