முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்தும் அரசின் அசத்தல் திட்டம்.. என்ன தெரியுமா?

This Government Investment Scheme Can Double Your Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடியும்.

முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்தும் அரசின் அசத்தல் திட்டம்.. என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Apr 2026 15:47 PM

 IST

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்யவில்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே தான் சம்பாதிக்கும் பணத்தில் பகுதி அளவாவது சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் முதலீடு செய்யும் அளவுக்கு தங்களிடம் பணம் இல்லை என நினைத்துக்கொண்டு முதலீடு செய்யாமலே இருந்து விடுகின்றனர்.

இது தான் தவறான செயலாக மாறிவிடுகிறது. அஞ்சலம் மூலம் வழங்கப்படும் அரசின் இந்த திட்டத்தில் வெறும் ரூ.1,000 கூட முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபம் பெறலாம். அது என்ன திட்டம், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலகங்கள் மூலம் அரசு வழங்கும் பாதுகாப்பான திட்டம்

இந்தியாவில் சேமிப்பு மற்றும் முதலீடு என்ற பெயரில் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன. இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இதன் காரணமாகவே பலர் முதலீடு செய்யவே யோசனை செய்கின்றனர். அத்தகைய கவலைகள் எதுவும் இன்றி முதலீடு செய்ய பாதுகாப்பான திட்டம் தான் அஞ்சலங்கள் மூலம்  அரசு செயல்படுத்தி வரும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme). இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். டெபாசிட் திட்டங்களை விட இந்த திட்டட்திற்கு வட்டி அதிகம்.

இதையும் படிங்க : மிஸ் பண்ணாதீங்க! பிறப்பு சான்றிதழ் வாங்க இதுதான் கடைசி சான்ஸ் – வெளியான அறிவிப்பு

9 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் முதலீடு

இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில்,  ஒவ்வொரு ஆண்டும் அந்த தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வரும். அதன்படி இந்த திட்டத்தின் முடிவில் அதாவது, 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.5 லட்சம், உங்களுக்கு இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.10 லட்சமாக கிடைக்கும்.

இதையும் படிங்க : அப்புறம் பாத்துக்கலாம்.. SIP முதலீட்டில் இந்த தவறை செய்யாதீங்க.. கோடிகளில் இழப்பு உங்களுக்கு தான்!

பிள்ளைகளின் கல்வி செலவு, திருமணம், வீடு கட்டுவது உள்ளிட்ட தேவைகள் உள்ளவர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்