இனி Minimum Balance குறித்த கவலை இல்லை.. விதிகளை மாற்றிய முக்கிய வங்கிகள்!
Banks Cancelled Minimum Balance Charges | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள், வங்கி கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு கட்டணம் வசூலித்து வந்தன. இந்த நிலையில், இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில முக்கிய வங்கிகள் இந்த கட்டணத்தை ரத்து செய்து அறிவித்துள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
வங்கி கணக்கில் (Bank Account) குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) இல்லையென்றால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வங்கிகள் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அதாவது, இந்தியாவில் உள்ள எஸ்பிஐ (SBI – State Bank of India) உள்ளிட்ட சில முக்கிய வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு பிறப்பித்து வந்த கட்டணத்தை ரத்து செய்துள்ளன. இதன் மூலம் இனி சேமிப்பு கணக்கு (Savings Account) வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகை குறித்து கவலையடைய தேவையில்லை. இந்த நிலையில், எந்த எந்த வங்கிகள் இந்த அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கி கணக்குகளில் வசூலிக்கப்படும் கட்டணம்
பொதுமக்கள் நிதி தேவை, பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வங்கியில் கணக்கு திறக்கின்றனர். அவ்வாறு கணக்கு திறக்கும் பட்சத்தில், கணக்கை பராமரிப்பதற்கு வங்கிகள் சில விதிகளை வைத்துள்ளன. அவற்றில் முதன்மையானது தான் குறைந்தபட்ச இருப்பு கட்டணம். ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு மதிப்பீட்டில் இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்யும். சில வங்கிகள் ரூ.500-ஐ குறைந்தபட்ச கட்டணமாக வைத்திருக்கும். சில வங்கிகள் ரூ.10,000, ரூ.20,000 என கட்டணத்தை நிர்ணயம செய்திருக்கும். இது வங்கிகளை பொருத்தும், கணக்குகளை பொருத்தும் நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு சவாலாக உள்ள நிலையில், சில வங்கிகள் கட்டணத்தை ரத்து செய்துள்ளன.
இதையும் படிங்க : Repo Rate : வீட்டு கடன் வைத்துள்ளவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ வட்டி விகிதம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
குறைந்தபட இருப்பு கட்டணத்தை ரத்து செய்த வங்கிகள்
பேங்க் ஆஃப் பரோடா
குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காமல் இருப்பதற்கு அனைத்து நிலையான சேமிப்பு கணக்குகளிலும் விதிக்கப்படும் கட்டணத்தை பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ரத்து செய்துள்ளது. இது ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியன் வங்கி
குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக இந்தியன் வங்கி (Indian Bank) அறிவித்துள்ளது. இது ஜூலை 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
கனரா வங்கி
அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை ரத்து செய்து கனரா வங்கி (Canara Bank) அறிவித்துள்ளது. இந்த கட்டண ரத்தில் சம்பள கணக்குகள் (Salary Account) மற்றும் NRI (Non Resident Indians) சேமிப்பு கணக்குகளும் அடங்கும்.
பிஎன்பி
பஞ்சாப் நேஷனல் வங்கியும் (Punjab National Bank) அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
பாரத் ஸ்டேட் வங்கி
வங்கி கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை வசூலித்து வந்த பாரத் ஸ்டேட் வங்கி (Bharat State Bank), தற்போது அதனை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாரத் ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது.
மேற்குறிப்பிட்டுள்ள இந்த 5 வங்கிகளும் தங்களது குறைந்தபட்ச இருப்பு கட்டணத்தை ரத்து செய்துள்ளதால், அது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.