SIP vs PPF.. ரூ.1.5 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் எது அதிக லாபம் தரும்?

SIP Vs PPF Investment Return | இந்தியாவில் எஸ்ஐபி, பிபிஎஃப் ஆகிவை மிகவும் பிரபலமான திட்டங்களாக உள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு திட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் அதிக லாபம் தரும் திட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

SIP vs PPF.. ரூ.1.5 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் எது அதிக லாபம் தரும்?

மாதிரி புகைப்படம்

Published: 

17 Mar 2026 16:46 PM

 IST

தற்போதைய சூழலில் சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை சம்பாதிக்கும் பணத்தை அப்படியே கையில் வைத்திருக்காமல் அதனை முதலீடு செய்து லாபம் பெற வேண்டும் என நினைக்கிறனர். இந்த சூழலில் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, எது அதிக லாபத்தை தரும் என சாமானியர்கள் மத்தியில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அரசின் பாதுகாப்புடன் கூடிய பிபிஎஃப் (PPF – Public Provident Fund) திட்டம் மற்றும் மிகவும் பிரபலமான முதலீடான எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) இந்த இரண்டு திட்டங்களில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் அதிக லாபம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எஸ்ஐபி, பிபிஎஃப் இரண்டு திட்டங்களும் எப்படி செயல்படும்

எஸ்ஐபி பங்குச்சந்தையை மையப்படுத்தி செயல்படும் ஒரு திட்டமாகும். இதுவே பிபிஎஃப் என்றால் அது அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு திட்டமாகும். இந்த இரண்டு திட்டங்களுமே நீண்ட கால நிதியை உருவாக்குவதற்கான சிறந்த திட்டங்களாக உள்ளன. ஆனால், இந்த இரண்டு திட்டங்களுமே வெவ்வேறு பாதையில் பயணிக்க கூடியவையாக உள்ளன. உதாரணமாக, பிபிஎஃப் சந்தையுடன் தொடர்பில் இருப்பதால் அதில் ரிஸ்குகள் மிக அதிகம். ஆனால், அதில் அதிக லாபம் கிடைக்கும். இந்த பக்கம் பிபிஎஃப் திட்டம், இது அரசின் பாதுகாப்பில் இருக்கும் திட்டம் ஆனால், இதில் குறைவான லாபம் மட்டுமே கிடைக்கும்.

இதையும் படிங்க : தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!

ரூ.1.5 லட்சத்திற்கு அதிக லாபம் எதில் கிடைக்கும்?

எஸ்ஐபியில் குறைந்தது ரூ.500 முதலே முதலீடு செய்ய முடியும். இதற்கு அதிகபட்ச வரம்பு என்பது எதுவும் இல்லை.  ஆனால், பிபிஎஃப் திட்டத்தில் குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். பிபிஎஃப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 வட்டி வழங்கப்படுகிறது. இதுவே எஸ்ஐபியில் சராசரியாக 12 சதவீதம்  வரை வட்டி வழங்கப்படும். இந்த நிலையில், எஸ்ஐபியில் ரூ.1.5 லட்சத்தை நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.14,04,238 வட்டியாக பெறுவீர்கள். இந்த நிலையில் மொத்த கார்பஸ் ரூ.29,04,238 ஆக இருக்கும்.

இதையும் படிங்க : மார்ச் 31-க்கு எல்பிஜி கேஒய்சி.. ஸ்டிரிக்டாக சொன்ன அரசு.. ஆன்லைனில் கேஒய்சி மேற்கொள்வது எப்படி?

இதுவே பிபிஎஃப் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களது மொத்த வருமானம் ரூ.5,82,282 ஆக இருக்கும். இதுவே மொத்த கார்பஸை கணக்கிடும் பட்சத்தில் ரூ.20,82,282 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்