FASTag Annual Pass : ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் கட்டணம் செலுத்த வேண்டாம்.. ஃபாஸ்டேக் ஆண்டு பாஸுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Fastag Annual Pass | இந்தியா முழுவதும் டோல்கேட் முறை அமலில் உள்ள நிலையில், தங்களது ஒவ்வொரு பயணத்திற்கும் பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், ஆண்டு பாஸ் மூலம் பயணம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

FASTag Annual Pass : ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் கட்டணம் செலுத்த வேண்டாம்.. ஃபாஸ்டேக் ஆண்டு பாஸுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Aug 2025 12:28 PM

இந்தியா முழுவதும் டோல்கேட் (Toll Gate) முறை நடைமுறையில் உள்ளது. டோல்கேட் கட்டணம் வசூலிக்கும்போது கால நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஃபாஸ்டேக் (Fastag) முறை அமல்படுத்தப்பட்டது. இது பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், அது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது ஆண்டு சந்தா முறைப்படி பயணம் செய்யும் வகையில் Annual Pass திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில்,  ஃபாஸ்டேக்கின் இந்த ஆண்டு பாஸ் வாங்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள டோல்கேட் கட்டண முறை

இந்தியாவை பொருத்தவரை ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு செல்வதற்காக வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதுதான் டோல் கட்டணம் என அழைக்கப்படுகிறது. முன்னதாக டோல் கட்டணம் செலுத்த வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நின்று பணம் செலுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அதிக நேரம் தேவைப்பட்ட நிலையில், விரைவாக டோல் கட்டணம் செலுத்தும் வகையில் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க : UPI : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இதன் மூலம் மிக விரைவால ஒருசில நொடிகளில் ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து டோல்கேட் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். பொதுமக்கள் தங்கள் பயண தேவைகளுக்கு ஏற்ப இதில் ரீச்சார்ஜ் செய்துக்கொள்ளலாம். இந்த நிலையில் தான் ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் வகையில் மத்திய அரசு ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஆகஸ்ட் 15, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது.

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் தனியார் கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்களுக்கானது. இதில் வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இந்த ஆண்டு பாஸ் திட்டத்திற்கு ரூ.3,000 கட்டணம் செலுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு சுமார் 200 முறை இந்தியா முழுவதும் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், இந்த ஃபாஸ்டேக் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள டோல்கேட்டுகளுக்கு பொருந்தாது.

ஃபாஸ்டேக் ஆண்டு பாஸ் – விண்ணப்பிப்பது எப்படி?

இந்த ஃபாஸ்டேக் ஆண்டு பாஸுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் ஃபாஸ்ட்டேக் கணக்கு கொண்டுள்ள தங்களது வாகனம் இதற்கு தகுதியானதா என்பதை முதலில் சோதனை செய்ய வேண்டும். பிறகு, ராஜ்மார்க்யாத்ரா செயலி (Rajmargyatra App) அல்லது NHAI (National Highway Authority of India) செயலி மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.