மாதம் மாதம் மிஸ் பண்ணாமா சரியான நேரத்திற்கு EMI கட்டணுமா?.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Mastering EMI Payments | ஏராளமான மக்கள் மாத தவணை முறையில் கடன் மற்றும் பொருட்களை வாங்கும் நிலையில், பலர் அதனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில், நிதி சிக்கல்கள் இல்லாமல் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாதம் மாதம் சரியாக மாத தவணை செலுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதம் மாதம் மிஸ் பண்ணாமா சரியான நேரத்திற்கு EMI கட்டணுமா?.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Jul 2025 12:27 PM

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகள் பூர்த்தி செய்ய கடன்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மாத தவணை (Monthly Installment) முறையில் வாங்குகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொருவரும் மாதத்திற்கு இரண்டு முதல் மூன்று மாத தவணைகளை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில், பலரால் உரிய நேரத்தில் மாத தவணைகளை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு மாத தவணை தவறும்போதெல்லாம், கூடுதலான கட்டணம், சிபில் ஸ்கோர் (Cibil Score) குறைவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். இந்த நிலையில், எந்த வித சிக்கல்களும் இன்றி முறையாக மாத தவணை செலுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிஸ் பண்ணாம மாத தவணை செலுத்து என்ன செய்ய வேண்டும்

கடனை ஒரே தவணையில் திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கும், பொருட்களை ஒரே தவணையில் வாங்க முடியாத பொதுமக்களுக்கும் உதவும் வகையில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கடைகள் மாத தவணை வழங்கி வருகின்றன. இந்த முறை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்ற காரணத்தால் ஒரே தவணையில் அதிக தொகை செலுத்தி பொருட்களை வாங்க முடியாத, கடனை அடைக்க முடியாத பொதுமக்கள் மாத தவணை தேர்வு செய்து, மாதம் மாதம் தங்களது ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில சமயங்களில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு மாத தவணையை முறையாக செலுத்த முடியாத சூழல் ஏற்படலாம். அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க சில விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும்.

சம்பளம் வாங்கும் தேதிக்கு அருகில் மாத தவணை செலுத்த வேண்டும்

மாத தவணை செலுத்தும் பொதுமக்கள் தங்களது சம்பள தேதிக்கு அடுத்த நாள் அல்லது 2 முதல் 3 நாட்களுக்குள் செலுத்தும் வகையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எந்த வித சிக்கலும் இன்றி மாத தவணையை முறையாக செலுத்த முடியும். உதாரணமாக 1 ஆம் தேதி சம்பளம் வருகிறது என்றால் 5 ஆம் தேதிக்குள் மாத தவணையை செலுத்தும்படி முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் சம்பள தேதிக்கு தொடர்பில்லாத தேதியை மாத தவணை செலுத்தும் தேதியாக வைத்திருந்தால் அதனை உடனடியாக மாற்றம் செய்துக்கொள்ளுங்கள்.

மாத தவணை தேதியை மாற்றம் செய்ய முடியுமா?

பெரும்பாலான வங்கிகள் மாத தவணை தேதியை மாற்றம் செய்ய அனுமதி வழங்குவதில்லை. ஆனால், எச்டிஎஃப்சி, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் மாத தவணை தேதியை மாற்றம் செய்ய அனுமதி வழங்குகின்றன. அதன் மூலம் நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப மாத தவணை தேதியை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

மூன்று மாதங்களுக்கான மாத தவணையை சேமித்து வைத்தல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மாதங்களுக்கான மாத தவணையை சேமித்து வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம், எப்போது வேண்டுமானாலும் நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவசர தேவைகளுக்கான மூன்று மாதங்களுக்கான மாத தவணையை சேமித்து வைப்பது எதிர்பாராத நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.

மாத தவணையை முறையாக செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

மாத தவணையை முறையாக செலுத்துவது கடனை சுலபமாக அடைக்க உதவுவது மட்டுமன்றி, தேவையற்ற கட்டணங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும். மேலும், மாத தவணையை தாமதமாக கட்டினால் சிபில் ஸ்கோர் குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது உங்கள் மீதான நம்பகத்தன்மையை குறைத்து எதிர்காலத்தில் நீங்கள் கடன் பெற முடியாமல் செய்துவிடும்.