3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு பிறகு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?
New ATM Charges Rules : இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் 3 பரிவர்த்தனைகளுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டுரையில் இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
வங்கிகளில் ஏடிஎம் (ATM) வசதி வந்ததற்கு பிறகு வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கி கிளைகளுக்கு செல்வது குறைந்து விட்டது. இருப்பினும் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான இலவச வரம்பு மற்றும் கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து பலருக்கும் தெளிவில்லாமல் இறுக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிகளின் படி, ஏடிஎம் செயல்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன் படி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே இலவச ஏடிஎம் பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்படும். அதன் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகள்
சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, ஒரு மாதத்தில் மொத்தம் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது பணம் எடுப்பது , பண இருப்பை தெரிந்துகொள்வது, மினி ஸ்டேட்மென்ட் போன்ற அனைத்து பரிவர்த்தனைகளும் அடங்கும்.
இதையும் படிங்க : போன் பே, கூகுள் பே-க்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்.. யுபிஐ சேவையை தொடங்க திட்டம்!
அதே போல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழ்பவர்கள் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கட்டணம் எவ்வளவு?
இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சமாக ரூ. 23 ஜிஎஸ்டியுடன் வரை வங்கிகள் வசூலிக்கலாம். அதே போல பண இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் போன்ற சேவைகளுக்கு சில வங்கிகள் ரூ.11 வரை கட்டணம் வசூவலிக்கின்றன. இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு வசூலிக்கப்படும் கட்டணங்கள் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.
அதே போல ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேல் பணத்தை வங்கியில் கணக்கில் வரவு வைக்கவும் அல்லது பணம் எடுத்தாலும் அவை கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டும். இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் சமர்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், நிதி வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சேமிப்பின் 10-30-50 விதி என்றால் என்ன?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஏடிஎம்களில் செலவழிக்க வேண்டிய கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்க, உங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்துங்கள். பொதுவாக அதில் கூடுதல் பரிவர்த்தனைகள் கிடைக்கும். வங்கி இருப்பை தெரிந்துகொள்வது போன்ற செயல்பாடுகளுக்கு இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் பயன்படுத்தலாம். மாதத்திற்கு எத்தனை பயன்படுத்துகிறோம் என்பதை கணக்கில் வைத்தால் இலவச வரம்பை மீறாமல் தவிர்க்கலாம்.