Gold Price : மெல்ல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி விலை ஏற்றம்!
Gold Price Rapidly Increased | தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று (ஜூலை 01, 2025) ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்னவாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜூலை 01 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று (ஜூலை 01, 2025) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.105 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,020 ஆகவும் ஒரு சவரன் விலை ரூ.72,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தங்கம் விலை குறையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வந்த நிலையில், மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்ந்துள்ளதால் அது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெல்ல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
2025, ஜூன் மாதத்தில் தங்கம் விலை கடும் உச்சத்தில் இருந்தது. அதாவது ஒரு கிராம் தங்மே ரூ.10,000-த்தை நெருங்கும் வகையில் இருந்தது. இதன் காரணமாக தங்கம் விலை அபார விலை உயர்வை அடையும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்
தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
1 ஜுலை, 2025 | ரூ.9,020 | ரூ.72,160 |
30 ஜூன் 2025 | ரூ.8,915 | ரூ.71,320 |
29 ஜூன் 2025 | ரூ.8,930 | ரூ.71,440 |
28 ஜூன் 2025 | ரூ.8,930 | ரூ.71,440 |
27 ஜூன் 2025 | ரூ.8,985 | ரூ.71,880 |
26 ஜூன் 2025 | ரூ.9,070 | ரூ.72,560 |
25 ஜூன் 2025 | ரூ.9,070 | ரூ.72,560 |
24 ஜூன் 2025 | ரூ.9,155 | ரூ.73,240 |
23 ஜூன் 2025 | ரூ.9,230 | ரூ.73,840 |
22 ஜுன் 2025 | ரூ. 9,235 | ரூ.73,880 |
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
நேற்று (ஜூன் 30, 2025) ஒரு கிராம் தங்கம் ரூ.8,915-க்கும், ஒரு சவரன் ரூ.71,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஜூலை 01, 2025) மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020 ஆகவும், ஒரு சவரன் ரூ.72,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.