Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஒரே நாளில் ரூ.3,600 உயர்ந்த தங்கம்.. ரூ.1,20,000-த்தை நெருங்கும் சவரன்!

Gold Price Crossed 1,17,000 Rupees In Chennai | சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 23, 2026) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது.

Gold Price : ஒரே நாளில் ரூ.3,600 உயர்ந்த தங்கம்.. ரூ.1,20,000-த்தை நெருங்கும் சவரன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Jan 2026 11:13 AM IST

சென்னை, ஜனவரி 23 : தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக கடும் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஜனவரி 23, 2026) மிக கடுமையான விலை உயர்வை அடைந்துள்ளது. அதாவது இன்றைய தினம் மட்டும் தங்கம் ரூ.3,600 விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், விரைவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,20,000-த்தை தாண்டும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

உலக நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் மிக கடுமையான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக வெனிசுலா – அமெரிகா, ஈரான் – அமெரிக்கா இடையே உள்ள மோதல் போக்கு தங்கத்தின் மீதான தாக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் நாளுக்கு நாள் மிக கடுமையான விலை உயர்வை அடைந்து வருகிறது.

இதையும் படிங்க : மியூச்சுவல் ஃபண்டில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. மாதம் ரூ.1 லட்சம் வரை லாபம் பெறலாம்!

10 நாட்களில் ரூ.11,000 உயர்ந்த தங்கம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
14 ஜனவரி 2026 ரூ.13,280 ரூ.1,06,240
15 ஜனவரி 2026 ரூ.13,290 ரூ.1,06,320
16 ஜனவரி 2026 ரூ.13,230 ரூ.1,05,840
17 ஜனவரி 2026 ரூ.13,280 ரூ.1,06,240
18 ஜனவரி 2026 ரூ.13,280 ரூ.1,06,240
19 ஜனவரி 2026 ரூ.13,450 ரூ.1,07 ,600
20 ஜனவரி 2026 ரூ.13,900 ரூ.1,11,200
21 ஜனவரி 2026 ரூ.14,415 ரூ.1,15,320
22 ஜனவரி 2026 ரூ.14,200 ரூ.1,13,600
23 ஜனவரி 2026 ரூ.14,650 ரூ.1,17,200

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.