Gold Price : நான்காவது நாளாக தொடர் உயர்வை சந்தித்த தங்கம்.. ரூ.15,000-த்தை நெருங்கியது!
Gold and Silver Price Hiked In Chennai | சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரான விலையில் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 25 : சென்னையில் இன்று (பிப்ரவரி 25, 2026) நான்காவது நாளாக தங்கம் விலை (Gold Price) உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் கடந்த சில நாட்களாக தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14,930-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் ரூ.15,000-த்தை தாண்டும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிரம்பின் வரி விதிப்பால் மீண்டும் விலை உயர தொடங்கிய தங்கம்?
மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அதிக அளவு இறக்குமதி வரியை அமலில் வைத்திருந்தார். இது தொடர்பான வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டிரம்பின் வரி விதிப்புகள் செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். ஆனால், டிரம்ப் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து உடனடியாக உலகளாவிய 15 சதவீத வரியை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக தான் தங்கம் விலை தற்போது தாக்கம் ஏற்பட்டு மீண்டும் உயர்வை நோக்கி சென்றுக்கொண்டு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?.. முழு விவரம் இதோ!
கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 16 பிப்ரவரி 2026 | ரூ.14,440 | ரூ.1,15,520 |
| 17 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 18 பிப்ரவரி 2026 | ரூ.14,230 | ரூ.1,13,840 |
| 19 பிப்ரவரி 2026 | ரூ.14,500 | ரூ.1,16,000 |
| 20 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 21 பிப்ரவரி 2026 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| 22 பிப்ரவரி 2026 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| 23 பிப்ரவரி 2026 | ரூ.14,860 | ரூ.1,18,880 |
| 24 பிப்ரவரி 2026 | ரூ.14,890 | ரூ.1,19,120 |
| 25 பிப்ரவரி 2026 | ரூ.14,930 | ரூ.1,19,440 |
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று (பிப்ரவரி 25, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இதேபோல கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.