தங்கம் விலை, பிப்ரவரி 24, 2026: கடந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், 24 பிப்ரவரி 2026 அன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,890-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொருத்தவரையில் கணிசமாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,440 உயர்வுடன் விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கத்தின் முக்கியத்துவம்:
இந்துக் கலாச்சாரத்தில் தங்கம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மக்கள் இதனை சேமிப்பின் அடையாளமாக வைத்துக் கொள்கின்றனர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தங்கத்திற்கு தனி இடம் உண்டு. கடந்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை கடந்தது. 2026 ஜனவரியில் அது ரூ.1,20,000 வரை உயர்ந்தது.
மேலும் படிக்க: நிதி மேலாண்மைக்கு நடுத்தர வர்கத்தினர் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!
உலக பொருளாதார சீரற்ற நிலை மற்றும் சர்வதேச பதற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் விலை உயர்ந்து வருகிறது. வரவிருக்கும் நாட்களிலும் தங்கம் விலை ஏற்றத் தாழ்வுடன் இருந்தாலும் குறைய வாய்ப்பு இல்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இன்றைய விலை நிலவரம் என்ன?
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,890-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.16,243-க்கும், ஒரு சவரன் ரூ.1,29,944-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 12 பிப்ரவரி 2026 | ரூ.14,600 | ரூ.1,16,800 |
| 13 பிப்ரவரி 2026 | ரூ.14,400 | ரூ.1,15,200 |
| 14 பிப்ரவரி 2026 | ரூ.14,560 | ரூ.1,16,480 |
| 15 பிப்ரவரி 2026 | ரூ.14,560 | ரூ.1,16,480 |
| 16 பிப்ரவரி 2026 | ரூ.14,440 | ரூ.1,15,520 |
| 17 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,14,560 |
| 18 பிப்ரவரி 2026 | ரூ.14,320 | ரூ.1,13,840 |
| 19 பிப்ரவரி 2026 | ரூ.14,500 | ரூ.1,16,000 |
| 20 பிப்ரவரி 2026 | ரூ.14,420 | ரூ.1,15,360 |
| 21 பிப்ரவரி 2026 | ரூ.14,680 | ரூ.1,17,440 |
| 23 பிப்ரவரி 2026 | ரூ. 14,860 | ரூ. 1,18,880 |
| 24 பிப்ரவரி 2026 | ரூ. 14,890 | ரூ. 1,19,120 |
