Gold Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Gold Price today: கடந்த மாதம் உச்சத்தில் இருந்த ஆபரணத்தங்கத்தின் விலை, பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று ஒரு லட்ச ரூபாய் என்ற மைல்கல்லை முதல் முறையாக எட்டிய தங்கம் விலை, அதன்பின் ஒரு லட்சத்திற்கு கீழ் இறங்கியபாடில்லை.

Gold Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

இன்று தங்கம் விலை குறைந்தது

Updated On: 

16 Feb 2026 12:10 PM

 IST

சென்னை, பிப்ரவரி 16: சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் உச்சத்தில் இருந்த ஆபரணத்தங்கத்தின் விலை, பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை தற்போது ரூ.1.15 லட்சத்தை தாண்டி வருவது சாமானிய மக்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதன் விலை சற்று குறைந்து வருவது நடுத்தர மக்களை நிம்மதியடைய செய்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,440க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.115,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்க போறீங்களா.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ரூ.1 லட்சித்திற்கு கீழ் இறங்காத தங்கம்:

சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்து தங்கம் விலையானது நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதைய அளவில் உலகிலேயே மதிப்புமிக்க பொருளாக திகழும் தங்கத்தை தனிநபர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வாங்கிக் குவித்து வருவதால் தங்கத்தின் விலை நாள்தோறும் கடுமையாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று ஒரு லட்ச ரூபாய் என்ற மைல்கல்லை முதல் முறையாக எட்டிய தங்கம் விலை, அதன்பின் ஒரு லட்சத்திற்கு கீழ் இறங்கியபாடில்லை.

மேலும் படிக்க: வட்டி மட்டுமே ரூ.11 லட்சம்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

வெள்ளியின் விலையும் உச்சம் தொட்டது:

அதேபோல், வெள்ளியின் விலையும் வரலாற்று உச்சம் தொட்டு வருகிறது.இதனிடையே, பிப்ரவரி 1ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்கம், வெள்ளியின் விலை கணிசமாக குறையத் தொடங்கியது. அந்தவகையில், இன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,650,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் அதிகரித்து காணப்பட்ட தங்கம் விலை:

கடந்த பிப்.11ம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,18,320 ஆக அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வாரத்தின் முடிவில், (பிப். 14ம் தேதி) தங்கம் விலை சவரன் ரூ.1,16,480ஆக இருந்தது. நேற்றும் அதே விலையே நீடித்தது. இந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,440க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.115,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?