Gold Price : ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி!
Gold Price Cut Down 320 Rupees Per Sovereign | தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ.70,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று (மே 20, 2025) தங்கம் விலை ரூ.69,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, மே 20 : சென்னையில் இன்று (மே 20, 2025) தங்கம் விலை (Gold Price) சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,710-க்கும், ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ரூ.70,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.69,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்ற தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை
- மே 11, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.9,045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 12, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,750-க்கும், ஒரு சவரன் ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 13, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,855-க்கும், ஒரு சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 14, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,805-க்கும், ஒரு சவரன் ரூ.70,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 15, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,610-க்கும், ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 16, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும், ஒரு சவரன் ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 17, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும், ஒரு சவரன் ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 18, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும், ஒரு சவரன் ரூ.69,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 19, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும், ஒரு சவரன் ரூ.70,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- மே 20, 2025 – 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.8,710-க்கும், ஒரு சவரன் ரூ.69,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.75,000-ல் இருந்து ரூ.69,000 வரை குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை ரூ.75,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.69,000 என்ற வகையில் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தால் ஒரு சவரன் ரூ.1 லட்சம் வரை எட்டலாம் என கணிப்புகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், தற்போது விலை குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று (மே 20, 2025) தங்கம் விலை கிரமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.8,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.