Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருப்பூரில் பயங்கரம்.. மரத்தில் மோதி சிதறிய கார்.. 3 பேர் துடிதுடித்து பலி!

Tiruppur Car Accident : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, காங்கேயம் அருகே கட்டுப்பாட்டை இழுந்த கார், எதிரே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூரில் பயங்கரம்.. மரத்தில் மோதி சிதறிய கார்.. 3 பேர் துடிதுடித்து பலி!
திருப்பூரில் கார் விபத்துImage Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 May 2025 13:03 PM

திருப்பூர், மே 20 : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் (Tiruppur Car Accident). விபத்தில் தந்தை ராஜா, தாய் ஜானகி, மகள் ஹேமிநேத்ரா ஆகியோர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் தந்தை ராஜா, தாய் ஜானகி, மூத்த மகள் ஹேமிநேத்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் சாலை விபத்துகளால்  ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். எனவே, சாலை விபத்துகளை தடுக்க  மத்திய, மாநில அரசுகள்  தொடர்ந்து நடவடிக்கை எடுத்து  வருகிறது.

மரத்தில் மோதி சிதறிய கார்

மேலும், சாலை விதிகளையும் கடுமையாக்கி உள்ளது.  இருப்பினும், சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த நிலையில், திருப்பூர் ஒரு கோர விபத்து நடந்துள்ளது. அதாவது,  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி. இவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குழந்தைகளுக்கு கோடை விடுமுறை என்பதால், ராஜா தனது குடும்பத்துடன் கேரளாவிற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், கேரளாவில் 2025 மே 20ஆம் தேதியான இன்று அதிகாலை காரில் ஈரோடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காங்கேயம் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே இருக்கும் மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே, ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

3 பேர் துடிதுடித்து பலி

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா, அவரது மனைவி ஜானகி, அவரது மூத்த மகள் ஹேமிமித்ரா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 வயது சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு கூட, கரூர் அருகே ஆம்னி பேருந்தும், சுற்றுலா வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!
இறால் சாப்பிடுவீங்களா? இந்த விஷயத்தை கவனிக்க மறக்காதீங்க!...
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!
தக் லைஃப் படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ இதோ!...
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!
பைனலாக மாறிய ஐபிஎல் 2025 பைனல் இடம்.. பிசிசிஐ முக்கிய முடிவு!...
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையுமா?...
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!
என்னால் அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியல - மமிதா பைஜூ!...
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக..
40 தொகுதிகளை கேட்கும் பாஜக.. தீவிர ஆலோசனையில் அதிமுக.....
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?
ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?...
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் விளக்கம்!...
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!
கும்பத்தில் இணைந்த ராகு -சந்திரன்.. இந்த 5 ராசிக்கு நல்ல காலம்!...