வேற லெவலில் மாறும் 9 ரயில் நிலையங்கள்.. இவ்வளவு வசதிகளா? திறந்து வைக்கும் பிரதமர்!
Amrit Bharat Railway Station : அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களை 2025 மே 22ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை மே 20: அம்ரித் பாரத் திட்டத்தின் (Amrit bharat scheme) கீழ் நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களை பிரதமர் மோடி மே 22ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதில், தமிழகத்தில் 9 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய ரயில்களை அறிமுகப்படுத்தியும், பல்வேறு ரயில் நிலையங்களை மேம்படுத்தியும் வருகிறது. இதில் குறிப்பாக, ரயில் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 1,337 ரயில்களை நிலையங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையை 2024ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 103 ரயில்களின் புதுப்பிப்பு பணிகள் முடிந்துள்ளது.
வேற லெவலில் மாறப்படும் 9 ரயில் நிலையங்கள்
எனவே, இந்த ரயில் நிலையங்களை 2025 மே 22ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இதில், உத்தர பிரதேசத்தில் அதிகமாக ரயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, உத்தரப்பிரதேசத்தில் 19 நிலையங்கள், குஜராத்தில் 18, மகாராஷ்டிராவில் 16, ராஜஸ்தானில் 8 ரயில் நிலையங்களும், மத்திய பிரதேசத்தில் 6 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கர்நாடகவில் 5, தெலங்கானாவில் 3, மேற்கு வங்கத்தில் 3, கேரளாவில் 2, ஆந்திராவில் ஒன்று, அசாமில் 3, பீகாரில் 2, ஹரியானவில் 1, ஹிமாச்சல பிரதேசத்தில் 1, ஜார்க்கண்டில் 1, புதுச்சேரியில் 1 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட உள்ளன. குறிப்பாக, தமிழக்ததில் 9 ரயில்களும் திறக்கப்பட உள்ளன.
குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கேளரா உட்பட தெற்கு ரயில்வேக்கு 90 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் நடந்து முடிந்த நிலையில், 2025 மே 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை கடற்கரை, பரங்கிமலை, பார்க், மாம்பலம், கூடுவாஞ்சேலி, பெரம்பூர், அம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, சூலூர்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இவ்வளவு வசதிகளா?
இதில், 2025 மே 22ஆம் தேதி திறக்கப்பட ரயில் நிலையங்களில் ஸ்ரீரங்கம், விருதாச்சலாம், சூலூர்பேட்டை உள்ளிட்டவை அடங்கும். ரயில்வே அமைச்சகத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநர் திலீப் குமார் கூறுகையில், இந்திய ரயில்வே அம்ரித் பாரத் ரயில் நிலையத்தின் கீழ் உள்ள நிலையங்களை மேம்படுத்தி வருகிறது. உணவு அரங்கம், லிஃப்ட், காத்திருப்பு அறை, குழந்தைகள் விளையாடும் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வசதி, கண்காணிப்பு வசதி, நகரும் படிக்கட்டுகள், கூடுதல் அறைகள் போன்றவறை ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளன” என்றார். இந்த வசதிகளுக்கு நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.