தொடர் மழை.. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்.. 3 மாவட்டங்களுக்கு அலர்ட்!
Tamil Nadu Weather Update : தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, மே 20 : கடந்தசில நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் (Tamil nadu weather alert), தென்பெண்ணை ஆற்றில் (Thenpennai River) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் கூட மழை பெய்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்
குறிப்பாக, கொங்கு, டெல்டா, வட மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாகவே மழை பெய்து வருகிறது. மேலும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், தமிழக்ததில் முக்கிய ஏரிகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேஆர்பி அணையின் கொள்ளவான 52 அடியில் நீர்வரத்து 51 ஆக எட்டி உள்ளது. கேஆர்பி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 3,208 ஆக அதிகரிக்கப்பட்டள்ளது. கேஆர்பி அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகம், புதுவைமற்றும்காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/yzW19Tncv0
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 19, 2025
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாமென என அறிவுறுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கேஆர்பி அணையின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை இரு நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.