வரலாற்று உயர்வு.. இதுவரை இல்லாத புதிய உச்சம்.. ரூ.1,02,000-த்தை தாண்டிய தங்கம்!
Gold Price Crossed 1,02,000 Rupees First Time In History | தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று (டிசம்பர் 23, 2025) ஒரு சவரன் ரூ.1,02,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
சென்னை, டிசம்பர் 23 : தங்கம் (Gold) கடந்த சில நாட்களாகவே கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டிய நிலையில், மீண்டும் விலை குறைந்த விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 23, 2025) தங்கம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை (Gold Price) நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.1 லட்சத்தை தொட்ட பிறகு மீண்டும் சரிவை சந்தித்த தங்கம்
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் மிக வேகமாக உயர்ந்த நிலையில், அது விரைவில் ரூ.1 லட்சத்தை தாண்டு என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 15, 2025 அன்று தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.12,515-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு விலை குறைந்து ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : டிசம்பர் 31 தான் கடைசி.. அதற்குள் பான் கார்டில் இதை செய்யவில்லை என்றால் சிக்கல்!
ரூ.1,02,000-த்தை தாண்டிய தங்கம் விலை
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 14 டிசம்பர், 2025 | ரூ.12,370 | ரூ.98,960 |
| 15 டிசம்பர், 2025 | ரூ.12,515 | ரூ.1,00,120 |
| 16 டிசம்பர், 2025 | ரூ.12,350 | ரூ.98,800 |
| 17 டிசம்பர், 2025 | ரூ.12,400 | ரூ.99,200 |
| 18 டிசம்பர், 2025 | ரூ.12,440 | ரூ.99,520 |
| 19 டிசம்பர், 2025 | ரூ.12,380 | ரூ.99,040 |
| 20 டிசம்பர், 2025 | ரூ.12,400 | ரூ.99,200 |
| 21 டிசம்பர், 2025 | ரூ.12,400 | ரூ.99,200 |
| 22 டிசம்பர், 2025 | ரூ.12,570 | ரூ.1,00,560 |
| 23 டிசம்பர், 2025 | ரூ.12,770 | ரூ.1,02,160 |
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.