Gold Price : தங்கம், வெள்ளி அதிரடி விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai | சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.50 மற்றும் வெள்ளி கிராமுக்கு ரூ.5 விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தங்கம், வெள்ளி அதிரடி விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

01 May 2026 10:19 AM

 IST

சென்னை, மே 01 : மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம், வெள்ளி மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஈரான் போர்

ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் நிலையற்ற தன்மையில் இருந்து வருகிறது. அதாவது, பெரிய அளவு உயர்வையும் சந்திக்காமல், சரிவையும் சந்திக்காமல் இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அளவில் ஏற்பட்டுள்ள பெட்ரோ, டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதன் காரணமாக தங்கம், சமீப காலமாக சிறிய அளவிலான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : 30 ஆண்டுகள் கடனை வெறும் 17 ஆண்டுகளில் அடைக்கலாம்.. எப்படி?

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,050-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க!

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..