Gold Price : அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price Reduced | ஈரான் போர் காரணமாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், 6வது நாளாக இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Mar 2026 10:28 AM

 IST

சென்னை, மார்ச் 18 : ஈரான் போர் (Iran War) காரணமாக சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) குறைந்து வரும் நிலையில், இன்று (மார்ச் 18, 2026) மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போரால் குறைந்து வரும் தங்கம் விலை

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உலக முதலீட்டாளர்களின் கவனம் அதன் மீது சென்றுள்ளது. இந்த நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வரும் காரணமாக தங்கம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : LPG Crisis: கத்தாரிலிருந்து இந்தியா வந்த 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி.. எத்தனை சிலிண்டர்களை நிரப்பும் தெரியுமா?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570-க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் சரிந்துள்ளது. அதாவது வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்