Credit Card : Pay Slip இல்லாமல் கிரெடிட் கார்டு வாங்க வேண்டுமா?.. இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
How to Get Credit Card Without Pay Slip | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ஆனால், கிரெடிட் கார்டை பெற வேண்டும் என்றால் பே சிலிப் கட்டாயமாகிறது. இந்த நிலையில், பே சிலிப் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் (Economy) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஒருவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். பொருளாதார நெருக்கடி ஏற்படும் சமயத்தில், அந்த நபர் முன்னதாக ஏதேனும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்து வைத்திருந்தால் அவருக்கு அது பயனளிக்கும். இல்லையென்றால், நிதி நெருக்கடியில் இருந்து சமாளிக்க கடன் வாங்க வேண்டிய கட்டாயம் எழும். இதன் காரணமாக உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். சிலர் அதிக வட்டியுடன் கடன் வாங்கி பிரச்னையில் சிக்கிக் கொள்வதும் உண்டு . இந்த நிலையில் தான், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு, பிறகு மாத தவணையில் அந்த தொகையை செலுத்திக் கொள்ளலாம். இது பலருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
யார் யாருக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படும்?
வங்கி கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதன்படி கல்லூரி மாணவர்கள், இல்லதரசிகள், வேலைக்கு செல்லும் நபர்கள், தொழில் செய்யும் நபர்கள் என யார் வேண்டுமானாலும் கிரெடிட் கார்டுகளை பெற்று பயன்படுத்தலாம். ஆனால், கிரெட் கார்டுகளை வழங்குவதற்கு வங்கிகள் சில விதிகளை பின்பற்றுகின்றன. அதாவது, கிரடிட் கார்டு பெறும் நபரின் மாத ஊதியத்தின் அடிப்படையில் கிரெடிட் கார்டு அளவு தொகை நிர்ணயம் செய்யப்படும். இதற்கு பே சிலிப் (Pay Slip) முக்கியம் ஆகும். சிலர் தினசரி சம்பளம் பெறும் நபர்களாக இருப்பர். அவர்களுக்கு பே சிலிப் வழங்கப்படுவது இல்லை. இந்த நிலையில் பே சிலிப் இல்லாமல் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பே சிலிப் இல்லாமல் கிரெடி கார்டு பெறுவது எப்படி?
- நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு எதிராக எவ்வாறு கடன் பெறுகிறோமோ அதேபோல நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு எதிராக கிரெடிட் கார்டுகளையும் பெறலாம்.
- உங்களிடம் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப உறுப்பினரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கிரெடிட் கார்டு வாங்கலாம்.
- கல்லூரி மாணவர்களுக்கு பலனளிக்கும் வகையில், மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பே சிலிப் வழங்க வேண்டிய அவசியமில்லை.
- நீங்கள் சுய தொழில் செய்பவர் அல்லது ஃப்ரீலான்ஸ் (Freelance) செய்பவர் என்றால் வங்கி அறிக்கை உள்ளிட்ட வருமான சான்றிதழ்களை பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெறலாம்.
உங்களிடம் கிரெடிட் கார்டு பெறுவதற்கான பே சிலிப் இல்லையென்றால் மேற்கண்ட முறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.