Personal Loan : தனிநபர் கடனை சுலபமாக அடைக்கலாம்.. இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
Easy Way to Repay Personal Loan | பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக வங்கிகளில் கடன் பெறுகின்றனர். அவ்வாறு கடன் பெறும் பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடனை மிக சுலபமாக அடைக்கக்கூடிய சில டிப்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களுக்கு பொருளாதார தேவை (Economic Need) எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இது போன்ற சூழல்களில் கையில் பணம் இல்லாதவர்கள் வங்கி கடனை நாடுகின்றனர். குறிப்பாக அவசர மருத்துவ சேவை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். இத்தகைய அவசரமான சூழலில் கடன் வாங்கும் பொதுமக்கள் அதன் வட்டி விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ள மாட்டார்கள். காசு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் கடனை வாங்கி விடுவார்கள். பிறகு கடனுக்கான வட்டி அதிகம் உள்ளது, அதனை எப்படி திருப்பி செலுத்துவது என தெரியாமல் தவிப்பர். அத்தகைவர்களுக்கான சில சூப்பர் டிப்ஸ்கள் உள்ளன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
பர்சனல் லோன் ரீ பைனான்சிங்
பொதுவாக தனிநபர் கடன் வாங்கும் பொதுமக்கள் எந்த வட்டியில் கடன் வாங்குகின்றோம், அது எவ்வாறு கடன் தொகையை அதிகரிக்கும் என தெரியாமல் கடன் வாங்கி விடுகின்றனர். இந்த நிலையில் தான் பர்சனல் லோன் ரீ பைனான்சிங் (Personal Loan Refinancing) பெரும் உதவி செய்கிறது. பர்சனல் லோன் ரீ பைனான்சிங் என்பது ஏற்கனவே வாங்கிய கடனுக்காக மீண்டும் ஒரு புதிய கடன் வாங்கி அதனை அடைப்பது. உதாரணமாக ஒருவர் 14 சதவீதம் வட்டியுடன் கடன் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த சூழலில் கடன் வாங்கி நபர் ஒரு 10 சதவீதம் வட்டி கொண்ட வேறு ஒரு கடனை வாங்கி முன்னாடி வாங்கிய கடனை அடைக்கலாம். இதன் மூலம் பணத்தை சேகரிக்க முடியும்.
கடன் செலுத்தும் காலத்தை குறைப்பது
சிலர் கடன் வாங்கும்போது இருந்த நிதி நிலையை கருத்தில் கொண்டு மாதம் குறைந்த அளவு பணத்தை செலுத்தும் வகையில் அதிக ஆண்டுகள் தேர்வு செய்திருப்பர். இவ்வாறு செய்வது திருப்பி செலுத்தும் தொகையை அதிகரிக்க செய்துவிடும். இந்த நிலையில், ஒவ்வொரு மாதம் தவணை செலுத்தும் போதும் கூடுதல் தொகையை செலுத்தி வரும் பட்சத்தில் திருப்பி செலுத்தும் தொகை குறைய வாய்ப்புள்ளது.
ஒரே இடத்திற்கு அனைத்து கடன்களையும் மாற்றுவது
சிலர் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனை வாங்கி வைத்திருப்பர். இந்த நிலையில், அது கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலையில், அனைத்து கடனையும் ஒரே இடத்தில் வாங்குவது சிறப்பானதாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட டிப்ஸ்களை பின்பற்றும் நிலையில், தனிநபர் கடன்களை மிக சுலபமாக அடைத்துவிடலாம்.