10 கிலோவாக குறைக்கப்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்?.. மத்திய அரசு விளக்கம்!

Rumors of Domestic Gas Cylinder Weight | இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் அளவு 10 கிலோவாக குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

10 கிலோவாக குறைக்கப்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்?.. மத்திய அரசு விளக்கம்!

கோப்பு புகைப்படம்

Published: 

25 Mar 2026 08:29 AM

 IST

புதுடெல்லி, மார்ச் 25 : ஈரான் போர் (Iran War) காரணமாக இந்தியாவில் (India) மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு (Gas Cylinder Shortage) ஏற்பட்டட்து. இந்த சிக்கலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கோண்டு வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் அளவு 10 கிலோவாக குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், அது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் எடை குறைக்கப்படுகிறது?

ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டு இருந்த நிலையில், இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சந்தித்து. கேஸ் சிலிண்டர்களை பதுக்குவது, அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் அளவை 10 கிலோவாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரவி வந்தது. இந்த நிலையில், அது குறித்து மத்திட பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : ரயில்களில் கல் வீசினால் கடும் நடவடிக்கை… ரயில்வே எச்சரிக்கை

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் எடை குறைப்பு – போலியான தகவல்

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் எடை 14.2 கிலோவில் இருந்து 10 கிலோவாக குறைக்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை. இறக்குமதி பாதிப்பால் தட்டுபாடு ஏற்பட்டாலும், எடையை குறைக்கும் எந்த திட்டமும் இல்லை. சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடை குறித்து குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் யூகங்களே. பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்வ வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மாநிலங்களுக்கு வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்திய மத்திய அரசு.. ஹோட்டல், டீ கடைகளுக்கு குட் நியூஸ்!

நாட்டில் பெட்ரோல், டீசம் மற்றும் கேஸ் சிலிண்டர் தடையின்று கிடைக்க தேவையான இருப்பு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் போதிய இருப்பு உள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல் எந்த வித எடை குறைப்பும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்