வரி உஷார்.. 100% அபராதம் விதிப்பு என பட்ஜெட்டில் எச்சரிக்கை விடுத்த நிர்மலா சீதாராமன்!
Important Announcements On Income Tax In Union Budget 2026 | வரி செலுத்தும் நபர்கள் வருமானத்தை மறைத்தால் சுமார் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் வருமான வரி தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வருமான வரி குறித்து நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு
புதுடெல்லி, பிப்ரவரி 01 : 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் மாத இறுதிக்கு பதிலாக மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ள அவர், வருமானத்தை மறைத்தால் சுமார் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
வரி கால்குலேட்டர்
இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.