குடும்பத்தினர் பெயரில் வீடு வாங்கினால் வரிவிலக்கு கிடைக்குமா? உண்மை என்ன?

Section 54 Explained Simply : இந்தியாவில் ஒருவர் தனது பழைய வீட்டை விற்று அதன் மூலம் பெற்ற பணத்தை வைத்து புதிய வீடு வாங்கினால், அதற்கு வருமான வரி சட்டம் பிரிவு 54-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். ஆனால் அதே வீட்டை நம் குடும்ப உறுப்பினர் பெயரில் வாங்கினால் வரி விலக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குடும்பத்தினர் பெயரில் வீடு வாங்கினால் வரிவிலக்கு கிடைக்குமா?  உண்மை என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

13 Jul 2025 20:51 PM

இந்தியாவில் பலர் தங்களது வீட்டை விற்றதும் அந்த லாபத்தை வேறு ஒரு வீட்டில் முதலீடு செய்து பிரிவு 54ன் கீழ் வரி (Tax) விலக்கு பெறுகிறார்கள். ஆனால் ஒரு வீட்டை விற்று அதற்கு பதிலாக புதிய வீட்டை தங்களது கணவர், மனைவி அல்லது மகன் போன்ற குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கினால் வரிவிலக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கும்.  அப்படி குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வீடு (Home) வாங்கினாலும் நமக்கு வரி விலக்கு கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வருமானவரி சட்டத்தின் 54 பிரிவின் கீழ், சட்டபூர்வமான ஒப்பந்தத்தின் மூலம் வீடு வாங்கும்போது, விலைக்கு வாங்கியவர் உறவினராக இருந்தாலும், அந்த வரிவிலக்கை பெற முடியும்.

மும்பையின் போவாய் பகுதியை சேர்ந்த தாமனி என்பவர்  தனது பழைய வீட்டை ரூ.5.98 கோடிக்கு விற்று அந்த லாபத்தை வரிவிலக்கு பெறும் வகையில் ரூ.3.85 கோடிக்கு புதிய அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கினார். ஆனால் அது அவரது கணவர் பெயரில் வாங்கியது தெரிந்த நிலையில் வருமான வரித்துறையினர் வரிவிலக்கு மறுக்கப்பட்டது.

இதுகுறித்து டேக்ஸ்படி நிறுவனர் சுஜித் பங்கார் தெரிவித்தாவது, உண்மையாகவே நீங்கள் முறையான ஆவணங்களுடன் பணப்பரிமாற்றம் செய்து வீடு வாங்கியிருப்பது தான் முக்கியம். உறவுமுறை முக்கியம் அல்ல. குறிப்பாக வங்கி வழியாக பணம் செலுத்தப்பட்டதா? முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா இவை தான் வருமானவரித்துறைக்கு இதுதான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க  : ஹோம் லோன் வாங்க சிறந்தது எது? அரசு வங்கியா? தனியார் வங்கியா?

வருமானவரி சட்டத்தின் 54 பிரிவு எப்படி வரி விலக்கு கிடைக்கும்?

வீடு விற்று அதில் கிடைத்த தொகையை 2 ஆண்டுக்குள் அல்லது விற்பதற்கு 1 ஆண்டு முன்னதாகவே புதிய வீட்டில் முதலீடு செய்தால் வருமானவரி சட்டம் பிரிவு 54-ன் கீழ் வரிவிலக்கு பெறலாம். பழைய வீட்டின் விலை ரூ.60,00,000 எனவும், நீங்கள் புதிய வீட்டை ரூ.45,00,000 என வைத்துக்கொண்டால் நீங்கள் ரூ.45 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்கு பெற முடியும். மீதமுள்ள ரூ.15 லட்சத்துக்கு வரி கட்ட வேண்டும்.

வரிவிலக்கு பெற என்ன செய்ய வேண்டும்?

  • வங்கி வழியாக பணம் செலுத்தியிருக்க வேண்டும்.

  • விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  • வருமான வரி கட்டாயமான இடங்களில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்

  • வீடு விற்ற குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய வீடு வாங்கப்பட்டிருக்க வேண்டும்

  • அனைத்து சட்ட ஆவணங்களும் தயாராக இருக்க வேண்டும்.

இதையும் படிக்க : இத பண்ணலன்னா, உங்கள் வீடு உங்கள் சொத்தாக கருதப்படாது – ரியல் எஸ்டேட் நிபுணர் எச்சரிக்கை!

குடும்ப உறுப்பினர் பெயரில் வீடு வாங்கினாலும் வருமான வரிசட்டம் பிரிவு 54ன் கீழ் வரிவிலக்கு பெறலாம். சட்டப்படி அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தால் நமக்கு வரி விலக்கு கிடைக்கும்.  இந்த தகவல், வீட்டை விற்றுவிட்டு, அதன் மூலம் புதிய வீடு வாங்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.