Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? இதன் நன்மைகள் என்ன?

Sovereign Gold Bonds : மற்ற முதலீட்டு திட்டங்களைக் காட்டிலும் தங்க பத்திர திட்டத்தில் அதிக நன்மைகள் இருக்கின்றன. தங்கத்தின் மதிப்பு உயரும் போது நாம் முதலீடு செய்திருக்கும் பணத்தின் மதிப்பும் உயரும் என்பதால் இது சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பான திட்டமா ? இல்லையா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? இதன் நன்மைகள் என்ன?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 11 Apr 2025 20:47 PM

நம்மிடம் இருக்கும் பணத்தை அதிகரிக்க நல்ல திட்டங்களில் முதலீடு செய்வதுஅவசியமாகும். முதலீடுகள் ஓய்வு காலத்தில் நமக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் முதலீடுகள் மூலம் நிலையான வருமானத்தைப் பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund), ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பல வழிகளில் முதலீடு செய்வதன் மூலம் நம் பணத்தை சேமிக்கவும், அதன் மதிப்பை உயர்த்தவும் முடியும். அதில் முக்கியமானது தங்க பத்திரம் திட்டம் (Sovereign Gold Bonds) . இது ரசர்வ் வங்கியால்  (Reserve Bank of India) அறிமுகப்படுத்தப்படும் திட்டம் என்பதால் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தது 1 கிராம் தங்கத்தின் மதிப்பில்,  8 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மேலும் 9 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் பணத்திற்கு வரி விலக்கு சலுகையும் உண்டு என்பது கூடுதல் நன்மை.

இந்த திட்டத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் தங்கத்தின் விலை உயர்ந்தால் அதற்கேற்ப நமது முதலீட்டின் மதிப்பு உயரும். மேலும் பத்திரங்களை வைத்து பங்கு சந்தைகளில் வர்த்தகம் செய்யலாம். இந்த பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் கிடைக்கின்றன. மேலும் விலை உயர்வுக்கு ஏற்ப மதிப்பு உயரும் என்பதால் நமக்கு நல்ல லாபகரமான வாய்ப்பாக பார்க்கப்படும். முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை உயர்வால் ஏற்படும் மூலதன உயர்வுடன் கூடுதல் வட்டியும் பெற முடியும்.​

இந்த தங்க பத்திர திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது ?

இந்த பத்திரங்கள் வணிக வங்கிகள், இந்திய லிமிடெட் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன்ஸ், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட், பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் மற்றும் தபால் நிலையம்  மூலம் விற்கப்படுகின்றன. இந்த பத்திரங்களை நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் வாங்கலாம். இந்த பாண்டுகள் இந்திய அரசின் முழுமையான உத்தரவாதத்துடன் வழங்கப்படுவதால் முதலீட்டாளர்களின் முதலீடு பாதுகாப்பாக இருக்கும். இந்த பாண்டுகள் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்திற்கு சமமான மதிப்பில் முதலீடு செய்யலாம். தனிநபர்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டம் பாதுகாப்பானதா?

முதலீட்டாளர்கள் தங்கத்தின் சந்தை விலை உயர்வால் கூடுதல் லாபம் பெறலாம். இந்த பத்திரங்கள் நேரடி பத்திரமாகவும், டிஜிட்டல் வடிவத்திலும் கிடைக்கின்றன. இதனால் இந்த திட்டங்கள் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.  ரிசர்வ் வங்கி அங்கீகரித்திருப்பதால் மற்ற முதலீடுகளைக் காட்டிலும் இது நிலையானதாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 கிராம் தங்கத்திற்கு சமமான மதிப்பில் இருந்து முதிலீடு செய்யலாம் என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் முதலீடு செய்வதற்கு ஏதுவானது. மேலும் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதால் நாளுக்கு நாள் நம் முதலீடும் கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய சிறப்புகள் இருப்பதால் இது நம்பகத்தன்மையான மூதலீடாக பார்க்கப்படுகிறது.

 

.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம்.. ஐபிஎல்லை ரத்து செய்ய பிசிசிஐ
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம்.. ஐபிஎல்லை ரத்து செய்ய பிசிசிஐ...
கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!
கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!...
ராஜஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை விமானி கைது!
ராஜஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை விமானி கைது!...
பாகிஸ்தானின் லாகூரை குறி வைத்த இந்தியா.. பதிலடி தொடக்கம்!
பாகிஸ்தானின் லாகூரை குறி வைத்த இந்தியா.. பதிலடி தொடக்கம்!...
அழுத்ததால் ரோஹித் சர்மா ஓய்வா..? விளக்கம் தந்த பிசிசிஐ..!
அழுத்ததால் ரோஹித் சர்மா ஓய்வா..? விளக்கம் தந்த பிசிசிஐ..!...
LIVE :பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி? சரக்கு விமானத்தால் சர்ச்சை
LIVE :பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி? சரக்கு விமானத்தால் சர்ச்சை...
வெட்டப்பட்ட தர்பூசணியை பிரிட்ஜில் வைப்பதால் ஆபத்தா?
வெட்டப்பட்ட தர்பூசணியை பிரிட்ஜில் வைப்பதால் ஆபத்தா?...
பாகிஸ்தான் விமானப்படையின் F-16 விமானம்.. சுட்டு வீழ்த்திய இந்தியா
பாகிஸ்தான் விமானப்படையின் F-16 விமானம்.. சுட்டு வீழ்த்திய இந்தியா...
ராஜஸ்தானை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய இந்தியா
ராஜஸ்தானை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய இந்தியா...
ஜம்மு விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி!
ஜம்மு விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி!...
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி எப்போது?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி எப்போது?...