பாகிஸ்தான் விமானப்படையின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா!
India-Pakistan Tension: பாகிஸ்தான் விமானப்படையின் F-16 சூப்பர்சோனிக் போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. F-16 போர் விமானத்தை பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து வாங்கியது. இந்த போர் விமானத்தை லாக்ஹீட் மார்ட்டின் உருவாக்கியுள்ளது. இது உலகின் 4வது தலைமுறை போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்று பாகிஸ்தான் அதை பயன்படுத்தியது.

பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கின்றன. பாகிஸ்தான் விமானப்படையின் F-16 சூப்பர்சோனிக் போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் 2 JF-17 போர் விமானங்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தவிர, பாகிஸ்தான் வானில் ஏவிய 8 ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தது.
இதற்க்கிடையில், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார், சம்பா மாவட்டங்களிலும், பஞ்சாபின் பதான்கோட், ஃபெரோஸ்பூர் மற்றும் ஹோஷியார்பூர் மாவட்டங்களிலும் முழுமையான மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் அறிவுறுத்தலின் பேரில் மின் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராணுவம் மற்றும் விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
2 முறை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்:<
Breaking 🚨
India has shot down Pakistan’s F16 Jet 🔥#OperationSindoor2 pic.twitter.com/VtxvnWTuFN
— Mr. Democratic (@Mrdemocratic_) May 8, 2025
/h3>
F-16 போர் விமானத்தை பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து வாங்கியது. இந்த போர் விமானத்தை லாக்ஹீட் மார்ட்டின் உருவாக்கியுள்ளது. இது உலகின் 4வது தலைமுறை போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்று பாகிஸ்தான் அதை பயன்படுத்தியது. இதை இந்திய இராணுவம் அதை கண் இமைக்கும் நேரத்தில் அழித்துவிட்டது. முன்னதாக, 2019 பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது இந்தியா F-16 ஐ சுட்டு வீழ்த்தியது.