Viral Video : அசால்டாக சாலையில் நடந்து சென்ற அரிய வகை பனி சிறுத்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Rare Snow Leopard Spotted in Spiti Valley | உலகின் மிக அரிய வகை உயிரினமாக பனி பிரதேசத்தில் வாழும் பனி சிறுத்தை உள்ளது. இந்த சிறுத்தைகள் பெரும்பாலும் மனிதர்களின் கண்களில் தென்படாத நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி வேலியில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

உலகில் பல வகையான வித்தியாசமான மற்றும் தனித்துவம் வாய்ந்த விலங்குகள் உள்ளன. பல விலங்குகள் எண்ணிக்கையில் அதிக அளவு இருக்கும் நிலையில், சில விலங்குகள் எண்ணிக்கையில் மிக குறைவாக இருக்கும். அதாவது உலக அளவில் 5-க்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும். ஒரு இணம் அழிந்து வரும்போது இவ்வாறு மிக குறைவான எண்ணிக்கையை அடையும். அல்லது, அந்த விலங்குகளுக்கு ஏற்ற கால சூழல் இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் காரணமாக இவை நடைபெறும். அந்த வகையில், பனி சிறுத்தௌ என அழைக்கப்படும் வெள்ளை சிறுத்தை ஒன்று சாலையில் நடந்துச்செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசால்டாக சாலையில் நடந்துச் சென்ற பனி சிறுத்தை
இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றுதால் ஹிமாச்சல பிரதேசத்தில் (Himachal Pradesh) உள்ள ஸ்பிட்டி வேலி (Spiti Valley). இது மிகவும் அழகான சுற்றுலா தளம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு, ஸ்பிட்டி வேலிக்கு சுற்றுலா சென்ற ஒரு குழு மிகவும் அரிய வகையாக பனி சிறுத்தையை நேரில் கண்டுள்ளது. அந்த சிறுத்தை சாலையில் நடந்துச் செல்லும் வீடியோவையும் அந்த குழு இணையத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
வைரல் வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள்
மிகவும் அரிய வகை விலங்கான பனி சிறுத்தை ஸ்பிட்டி வேலியில் சுற்றித் திரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுவரை வெள்ளை புலி மட்டும் தான் உல்லது என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், பனி பிரதேசத்தில் வாழும் வெள்ளை நிற சிறுத்தையும் உள்ளது என தன இப்போதுதான் தெரிந்துக்கொண்டதாக பதிவிட்டுள்ளார். இதேபோல, உலகில் இவ்வளவு அரிய வகை உயிரினங்கள் உள்ளனவா. இயற்கை இன்னும் எத்தனை எத்தனை அதிசயங்களை தான் தன்னுள் அடங்கி வைத்துள்ளதோ என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை அந்த வைரல் வீடியோவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.