India vs Pakistan Live Updates : பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி? சரக்கு விமானத்தால் பரபரப்பு
India vs Pakistan War Tension : ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது இந்நிலையில் இன்று இரவு முதல் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக ஜம்முகாஷ்மீர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் இந்தியா முறியடித்துள்ளது

LIVE NEWS & UPDATES
-
ஐஎஸ்ஐ அலுவலகம் மீது தாக்குதல்
லாகூரில் உள்ள ஐ.எஸ்.ஐ தலைமையகத்தின் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
காலை 10 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு
பாகிஸ்தான் மீது இந்திய தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில்வெளியுறவு அமைச்சகமும் மே 9, 2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கராச்சியில் துருக்கி சரக்கு விமானம்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் துருக்கிய சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்த சரக்கு விமானத்தில் துருக்கிய ட்ரோன்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மே 8, 2025 நண்பகல் 12 மணியளவில் ஒரு துருக்கிய சரக்கு விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிகிறது.
-
வெளிநாட்டு தலைவர்களுக்கு விளக்கமளித்த வெளியுறவுத்துறை அமைச்சர்
பாகிஸ்தானுடனான தாக்குதல் சம்பம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் விளக்கமளித்தார்.
-
பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள்
பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், கோட்லி ஆகிய பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இம்ரான் கானை வெளியே கொண்டு வர முயற்சி..!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை பயன்படுத்தி சிறையில் உள்ள இம்ரான்கானை வெளியே கொண்டு வர அவரது ஆதரவாளர்கள் முயற்சி
-
இந்தியா தக்க பதிலடி
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாகூர், இஸ்லாமாபாத், பஹவல்பூர் மற்றும் சியால்கோட்டுக்குப் பிறகு, இப்போது பெஷாவரில் இந்தியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
கராச்சி துறைமுகத்தை தாக்கிய இந்திய இராணுவம்..!
இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து கராச்சி துறைமுகத்தை அழித்துள்ளது. 1971க்கு பிறகு இந்திய ராணுவம் கராச்சி துறைமுகத்தை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாகிஸ்தான் மீது முப்படை தாக்குதல்..!
பாகிஸ்தான் மீது இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்..!
இந்திய எல்லையில் உள்ள உரி பகுதியில் பொதுமக்களின் வீடுகளில் பாகிஸ்தான் ராணுவம் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்துவதில் இந்திய ராணுவம் மிகவும் தீவிரமாக உள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக ஜம்மு நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து வரும் ட்ரோன்கள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. சில ராக்கெட்டுகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. ஜம்முவில் மொத்தம் ஏழு இடங்களில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் அமிர்தசரஸில் மின் தடை விதிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அக்னூரில் சைரன்கள் ஒலித்தன.
Published On - May 08,2025 10:19 PM