Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உத்தரவாதம் இல்லாத கடன்கள்.. அரசின் இந்த திட்டங்களை செக் பண்ணுங்க!

Quick Loans without Collateral | பொதுமக்களுக்கு எதிர்பாராத நேரங்களில் நிதி தேவைப்படும். அல்லது தொழில் தொடங்க முதலீடு செய்ய நிதி உதவியை நாடுவர். அத்தகைய நபர்களுக்கு அரசு வழங்கும் இந்த உத்தரவாதம் இல்லாத கடன் திட்டங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உத்தரவாதம் இல்லாத கடன்கள்.. அரசின் இந்த  திட்டங்களை செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 11 Apr 2025 19:22 PM

பொருளாதாரம் (Economy) என்பது மனிதர்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத சூழலில் ஏற்படும் நிதி சிக்கல்களை (Financial Struggles) சந்திக்க நேரிடும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிதி சேமிப்பை (Money Saving) மேற்கொண்டு வைத்திருக்கும் நபர்களுக்கு, எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் நிதி சவால்களை சமாளிக்க பயனுள்ளதாக இருக்கும். ஆனால், நிது சேமிப்பை மேற்கொள்ளாத நபர்களுக்கு அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நிலையில் தான், பெரும்பாலானவர்கள் கடன் உதவிகளை நாடுகின்றனர்.

அவசர தேவைகளுக்காக கடனை நாடும் பொதுமக்கள்

பொதுவாக வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் பல கட்டங்களை தாண்டி வர வேண்டும். முதலில் கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு பிறகு கடன் வழங்கப்படுமா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து உரிய ஆவணங்களை சமர்பித்து அவை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தான் கடன் வழங்கப்படும். இந்த கட்டங்கள் முடிந்து வங்கி கணக்கிற்கு பண வர 10 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம். சில வங்கிகளை பொருத்து வங்கி கடன் பெற 1 மாதங்கள் வரை கூட ஆகலாம்.

அவசர சூழல்களில் நிதி தேவைப்படும் நபர்களுக்கு நிச்சயம் இது சிறந்த வழியாக இருக்காது. உடனடியாக கடனை பெற வேண்டும் என்றால் அது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கும். இன்னும் குறிப்பாக சிலருக்கு சிபில் ஸ்கோர் சிக்கல், ஆவண சிக்கல் உள்ளிட்டவை இருக்கும். இவற்றை எல்லாம் சரி செய்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்கப்படும். இந்த நிலையில், எந்த வித உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்கப்படும் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கும் அரசின் திட்டங்கள்

அரசு பல வகையான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் முத்ரா கடன் திட்டம் (PM Mudra Loan Scheme). இந்த திட்டத்தின் கீழ் சில வகையான கடன் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

  • சிசு (Shishu) – இந்த கடன் திட்டத்தின் மூலம் ஒருவர் ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
  • கிஷோர் (Kishor) – இந்த கடன் திட்டத்தின் மூலம் ஒருவர் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்.
  • தருன் (Tarun) – இந்த கடன் திட்டத்தின் மூலம் ஒருவர் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
  • தருன் பிளஸ் (Tarun Plus) – இந்த கடன் திட்டத்தின் மூலம் ஒருவர்  ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

இந்த திட்டங்கள் மூலம் கடன் பெற விரும்பும் நபர்கள் https://udyamimitra.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பைக் திருட்டு என புகார்.. இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்த காவலர்!
பைக் திருட்டு என புகார்.. இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்த காவலர்!...
தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து நடிகர் யோகி பாபு பேச்சு
தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து நடிகர் யோகி பாபு பேச்சு...
ட்ரோன் தாக்குதலை முறியடித்தது எப்படி? வீடியோ வெளியிட்ட ராணுவம்
ட்ரோன் தாக்குதலை முறியடித்தது எப்படி? வீடியோ வெளியிட்ட ராணுவம்...
புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட்
புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட்...
தவிக்கும் பாகிஸ்தான்.. உள்நாட்டில் ஆயுதப்படையினர் திடீர் அட்டாக்!
தவிக்கும் பாகிஸ்தான்.. உள்நாட்டில் ஆயுதப்படையினர் திடீர் அட்டாக்!...
இந்திய ராணுவத்தை விமர்சித்த பேராசிரியை பணியிடை நீக்கம்!
இந்திய ராணுவத்தை விமர்சித்த பேராசிரியை பணியிடை நீக்கம்!...
டிடி நெக்ஸ்ட் லெவல் படம்.. சென்சார் போர்ட் கொடுத்த சர்டிபிகேட்
டிடி நெக்ஸ்ட் லெவல் படம்.. சென்சார் போர்ட் கொடுத்த சர்டிபிகேட்...
இந்தியாவின் s-400 பாதுகாப்பு ஆயுதம்.. இதன் சிறப்புகள் என்ன?
இந்தியாவின் s-400 பாதுகாப்பு ஆயுதம்.. இதன் சிறப்புகள் என்ன?...
விஜயின் ஜன நாயகன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
விஜயின் ஜன நாயகன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்...
உச்சக்கட்ட பதற்றம்.. 24 விமான நிலையங்களை மூடிய இந்தியா!
உச்சக்கட்ட பதற்றம்.. 24 விமான நிலையங்களை மூடிய இந்தியா!...
கொட்டும் மழை.. சென்னைக்கு எப்படி? வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!
கொட்டும் மழை.. சென்னைக்கு எப்படி? வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!...