நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சர்டிபிகேட் இதுதான்
நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலயில் இந்தப் படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சர்டிபிகேட் விவரம் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் சந்தானம் (Actor Santhanam). இந்த நிகழ்ச்சியில் பழைய படங்கள் பலவற்றை ட்ரோல் செய்வது காமெடி பன்னுவார் சந்தானம். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார் சந்தானம். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இவரை இழுத்தவர் நடிகர் சிலம்பரசன். ஆம் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் சந்தானத்திற்கு காமெடி ரோல் முதன் முதலில் கொடுத்தது சிலம்பரசன் (Actor Silambarasan) தான். இந்த வாய்ப்பு குறித்து நடிகர் சந்தானம் பல மேடைகளில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் ஆர்யா, விஷால், விஜய், ரஜினி, சூர்யா, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் என பலரின் படங்களில் காமெடி நடிகராக கலக்கி வந்தார் சந்தானம்.
பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிகர் சந்தானத்தின் காமெடி இல்லை என்றால் படம் ஒன்றுமே இல்லை என்பதைப் போல பலரது படங்கள் ஹிட் ஆவதற்கும் சந்தானத்தின் காமெடிதான் உதவி செய்தது என்று கூறலாம். தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த சந்தானம் பின்பு கதையில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி இவர் முதன்முதலில் நாயகனாக அறிமுகம் ஆனப் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீநாத் இயக்கி இருந்தார். முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2,ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலு குலு, ஏஜென்ட் கண்ணாயிரம், டிடி ரிட்டன்ஸ் என பல ஹிட் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் இங்கு நான் தான் கிங்கு ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தி நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாசிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, நிழல்கள் ரவி மற்றும் மாறன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாக இணையத்தில் கவனம் பெற்றது.
நடிகர் சந்தானம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#DevilsDoubleNextLevel censored U/A 🤩#DevilsDoubleNextLevelFromMay16@arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar @iamyashikaanand #Maran #MottaRajendran @ofrooooo @dopdeepakpadhy @barathvikraman @onlyartmohan… pic.twitter.com/5TScSyTedH
— Santhanam (@iamsanthanam) May 8, 2025
இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு தணிக்கை குழு யு/ ஏ சான்றிதழ் வங்கியுள்ளதைப் படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.