விஜயின் ஜன நாயகன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie: நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் 69-வது படமான ஜன நாயகன் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் டீசரை படக்குழு எப்போது வெளியிட உள்ளது என்பது குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் (Actor Vijay) தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தனது 69-வது படம் தான் கடைசி படம் என்றும் கடந்த ஆண்டே தெரிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் விஜயின் கடைசிப் படத்தை யார் இயக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் விஜயின் 69-வது படத்தை இயக்குநர் எச்.வினோத் (H Vinod) இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இவர் முன்னதாக அஜித்தின் துணிவு படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் விஜயின் வாரிசு உடன் திரையரங்கில் போட்டி போட்டு வெற்றியையும் கண்டது. இதனால் இயக்குநர் எச்.வினோத் தான் விஜயின் இறுதிப் படத்தை இயக்க உள்ளார் என்பது அவரது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்ஷன் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது ஆகும். படத்தின் அறிவிப்பு வெளியான போது இந்த நிறுவனம் நடிகர் விஜய்க்கு ஒரு ட்ரிபியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அது விஜய் ரசிகர்களிடையே அதிகமாக பரவியது. பலரும் அந்த வீடியோவைப் பார்த்து கண் கலங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியது. மேலும் படத்தில் உள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, மோனிஷா ப்ளெசி என பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார்.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதே நேரத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் பணிகளிலும் அவ்வபோது சென்று கவனித்து வருகிறார். ஷூட்டிங் மற்றும் அரசியல் என்று மாறிமாறி பிசியாக இருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் படம் வருகின்ற பொங்கல் பண்டியைகை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்னதாகவே அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.
இந்த நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி விஜயின் ஜன நாயகன் படத்தின் டீசர் அடுத்த மாதம் விஜயின் பிறந்த நாளான 22-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.