தீவிரமாகும் தாக்குதல்.. .ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்.. மத்திய அரசு அதிரடி!
India Pakistan Conflict : இந்தியா பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில், ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராணுவ தளபதி எப்போது வேண்டுமானாலும் பிராந்திய ராணுவத்தை அழைத்து கொள்ளவும், ஆட்களை சேர்க்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும்.

டெல்லி, மே 09: இந்தியா பாகிஸ்தான் (india pakistan conflict) இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில், இந்திய ராணுவ தலைமை அதிகாரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பை 2025 மே 9ஆம் தேதியான இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிகாரம் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத் தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளார். போர் பதற்றத்தில் ராணுவம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகைகளை மேற்கொண்டு வருகிறது. எல்லை மாநிலங்களில் பலத்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம்
இப்படியான சூழலில், இந்திய ராணுவ தலைமை அதிகாரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அறிவிப்பின்படி, 1948ஆம் ஆண்டு பிராந்திய ராணுவ விதிகளின் விதி 33இன் படி, மே 6, 2025 தேதியிட்ட அறிவிப்பின் கீழ், பாதுகாப்புப் பணிகளுக்காகவோ அல்லது வழக்கமான ஆயுதப் படைகளை ஆதரிப்பதற்கும் பிராந்திய இராணுவத்தின் ஒவ்வொரு அதிகாரியையும் சேர்ப்பதற்கு ராணுவத் தலைவருக்கு அரசாங்கம் அதிகாரம் அளித்துள்ளது.
தேவைப்படும் இடங்களில் வழக்கமாக இருக்கும் படைகளை விட கூடுதல் படை வீரர்களை அழைத்து கொள்ளலாம். தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தென்மேற்கு, அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் இராணுவ பயிற்சி இடங்கள் உட்பட அனைத்து பிரந்தியங்களிலும் உள்ள 32 படைகளில் 14 படைகளின் வீரர்களை எல்லைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணியாளர்கள் சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் அடுத்த மூன்று ஆண்டுகள் வரை இருக்கும். அதாவது, 2028 பிப்ரவலி 9ஆம் தேதி வரை இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அதிரடி
In exercise of the powers conferred by Rule 33 of the Territorial Army Rule 1948, the Central Government empowers Chief of the Army Staff to exercise the powers under that rule to call out every officer and every enrolled person of the Territorial Army to provide for essential… pic.twitter.com/eMiDhYouus
— IANS (@ians_india) May 9, 2025
இதற்கிடையில், அடுத்த கட்ட நகர்வு குறித்து முப்படை தலைமை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திரன் திவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப்படை தலைவர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.சிங் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.