பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 21 பேர் துடிதுடித்து பலி.. இலங்கையில் அதிர்ச்சி

Srilanka Bus Accident : இலங்கையில் மலைப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து, திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 100 மீட்டர் ஆழத்தில் கவிழ்ந்த பேருந்தில் 70க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 21 பேர் துடிதுடித்து பலி.. இலங்கையில் அதிர்ச்சி

இலங்கையில் பேருந்து விபத்து

Updated On: 

11 May 2025 13:54 PM

இலங்கை, மே 11 : இலங்கையில் பேருந்து கவிழ்ந்ததில் (Srilanka Bus Accident) 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள தலைநகர் கொழும்புவில் இருந்து கிழக்கே சுமார் 140 கி.மீ தொலைவில் உள்ள கோட்மலே நகருக்கு அருகில் 2025 மே 11ஆம் தேதியான இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது.

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து

தீவின் தெற்கே உள்ள புனித யாத்திரை நகரமான கதிர்காமத்திலிருந்து மத்திய நகரமான குருநாகலுக்கு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அரசு பேருந்து ஒன்று சுமார் 70 பேரை ஏற்றிக் கொண்டு கோத்மலைப் பகுதி வழியாக சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து வெறும் 50 பேரை ஏற்றிச் செல்லும் திறனை கொண்டது.

ஆனால், அந்த பேருந்தில் 70 பேர் பயணித்து சென்றிருக்கின்றனர்.  மலைப் பகுதிகளில் சுமார் 70 பயணிகளுடன் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. கோத்மலைப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, ஓட்டுநர் இடதுபுறம் திரும்ப முயன்று இருக்கிறார். அப்போது, பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

100 மீட்டர் ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உள்ளூர் மக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்டனர். இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

21 பேர் துடிதுடித்து பலி


மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிக்ள தற்போது முடிவடைந்துள்ளது. அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  உயிரிழந்தவர்களை அடையாளம் பணிகள் நடந்து வருகிறது. மேலும், முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

ஏப்ரல் 2005க்குப் பிறகு இலங்கையில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இன்று நடந்த விபத்து உள்ளது.  2005ல் பொல்கஹவேலா நகரில் நடந்த பேருந்து விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் ஆண்டுதோறும் சராசரியாக 3,000 சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் தீவின் சாலைகள் உலகின் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.