இரண்டு நாட்கள் பயணமாக நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

Russia President To Visit India | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை (டிசம்பர் 04, 2025) இந்தியா வர உள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

ரஷ்ய அதிபர் புதின்

Published: 

03 Dec 2025 09:11 AM

 IST

புதுடெல்லி, டிசம்பர் 03 : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Russia President Vladimir Putin) நாளை (டிசம்பர் 04, 2025) இந்தியா வருகிறார். இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் ரஷ்யா மநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அவர் இந்தியா வருகிறார். புதின் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா வந்தார். அதற்கு பிறகு நாளை மீண்டும் இந்தியாவுக்கு வர உள்ளார். இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்த முக்கியத்துவங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக நாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருந்து வந்த புதின்

உலகின் மிகவும் சக்திவாந்த நாடுகளில் ஒன்றுதான் ரஷ்யா. ரஷ்யா பல உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில், இந்தியாவுடன் நல்ல நட்பு உறவை பாராட்டுகிறது. ரஷ்ய அதிபர் புதின் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். அதற்கு பிறகு ஏற்பட்ட ரஷ்யா  மற்றும் உக்ரைன் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதன் காரணமாக புதின் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க : கனமழையால் தத்தளிக்கும் இலங்கை… கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிய 150 தமிழர்கள் – உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு

நாளை இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்

இந்த நிலையில் தான் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவி வரும் கடுமையான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மத்தியஸ்துவம், வெற்றியை நோக்கி சென்றுள்ளது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் தான், புதின் இந்தியா வருகிறார்.

இதையும் படிங்க : ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: பலி எண்ணிக்கை 128ஆக உயர்வு

இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வரும் புதின்

2 நாட்கள் பயணமாகா இந்தியா வரும் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மூ (President Droupadi Murmu) ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாக வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!