அணு ஆயுத அந்தஸ்தை எந்த சூழலிலும் கைவிட முடியாது.. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் திட்டவட்டம்!
North Korea Nuclear Weapon Policy | உலக நாடுகளில் அதிக அளவும் மற்றும் அதிக திறன் கொண்ட அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக வடகொரியா உள்ளது. இந்த நிலையில், தங்களின் அணு ஆயுத அந்தஸ்கு குறித்து அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பேசியுள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
பியாங்யாங், மார்ச் 25 : அணு ஆயுத (Nuclear Weapon) அந்தஸ்தை எந்த சூழலிலும் கைவிட முடியாது என்று வடகொரியா (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளார். வடகொரியாவில் மூன்றாவது முறை அதிபராக பதவி ஏற்றுள்ள அவர், நாடாளுமனற கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அணு ஆயுத அந்தஸ்து குறித்து கிம் ஜாங் உன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வடகொரியாவில் மூன்றாவது முறையாக அதிபராக பதவி ஏற்ற கிம்
வடகொரியாவின் அதிரபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். மற்ற நாடுகளை விடவும் வடகொரியாவில் அவர் சில கடுமையான விதிகளை அமலில் வைத்துள்ளார். வடகொரியா மக்கள் என்ன உடை அணிய வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் அவரே தீர்மாணிக்கிறார். வடகொரியவில் கிம் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அவர் மூன்றாவது முறை வடகொரியா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஹார்முஸ் நீரிணையை கடக்க ரூ.18 கோடி கட்டணம்.. ‘சுங்க வரி’ விதித்து ஈரான் அதிரடி!
நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன்
வடகொரியாவில் மூன்றாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிம், நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாக தென் கொரியாவை (South Korea) அவர் அறிவித்தார். அதுமட்டுமன்றி, வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் அமைதியான முறையில் ஒன்றிணையலாம் என்ற கொள்கைக்கு எதிராக அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்களும் இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை.. காத்திருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு.. மேற்கு ஆசியாவில் என்ன நடக்குது?
அணு ஆயுத அந்தஸ்தை கைவிட முடியாது – கிம் ஜாங் உன்
இந்த கூட்டத்தில் அணு ஆயுதங்களை வைத்திருப்பது குறித்து பேசிய கிம், அணு ஆயுத அந்தஸ்தை எந்த சூழலிலும் கைவிட முடியாது என்று கூறியுள்ளார். அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அணு ஆயுதங்கள் குறித்த தங்களது நிலைப்பாட்டை அவர் தெளிவுப்படுத்தும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.