சீனாவில் கலைக்கட்ட தொடங்கிய புத்தாண்டு.. பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஜி ஜின்பிங்!

New Year Celebration Begins In China | சீனாவில் வரும் பிப்ரவரி 17, 2026 அன்று புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அங்கு கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கிய நிலையில், பொதுமக்கள் புத்தாண்டு பண்டிகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சீனாவில் கலைக்கட்ட தொடங்கிய புத்தாண்டு.. பொதுமக்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த ஜி ஜின்பிங்!

சீனா புத்தாண்டு

Updated On: 

12 Feb 2026 15:06 PM

 IST

பீஜிங், பிப்ரவரி 12 : சீனாவில் (China) பிப்ரவரி 17, 2026 அன்று புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட (New Year Celebration) உள்ளது. அங்கு புத்தாண்டு கொண்டாட இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அங்கு தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், சீனா புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீனாவில் விரைவில் கொண்டாடப்பட உள்ள புத்தாண்டு

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வழக்கங்களை கொண்டு இருக்கும். ஒரு நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றொரு நாட்டில் வேறு நாளில் வேறு விதமாக கொண்டாடப்படும். குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை இந்தியாவில் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், வேறு நாடுகளில் வேறு நாட்களில் கொண்டாடப்படும். அந்த வகையில் தான் சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 ஆம் தேதி புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க : இந்தியா–மலேசியா கூட்டுறவுக்கு புதிய வேகம்.. மலேசியா சென்ற பிரதமர் மோடி பாராட்டு

சீனாவில் கலைக்கட்ட தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டம்

சீனாவில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அங்கு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவில் இந்த ஆண்டு புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக கருதப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை குறிப்பதாக அந்த நாட்டு மக்கள் நம்புகின்றனர். எனவே அதற்கு ஏற்ற ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : உலகுக்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் – மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம்

சீனாவில் கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், சீன அதிபர் ஜின்பிங் அங்குள்ள டவுன்டவுண் வளாகத்திற்கு திடீரென வருகை புரிந்து பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அங்குள்ள கடை வீதிகளில் நடந்து சென்ற அவர், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து சீனாவின் வரலாற்று சின்னமான சுமார் 600 ஆண்டுகள் பழமையான சின்னமான லோங்புசி பகுதியை ஜின்பிங் சுற்றிப்பார்த்தார். இது அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்