மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்!

3.7 Magnitude Earthquake Strike Myanmar | மியான்மரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (ஜூலை 19, 2025) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜூலை 17, 2025 மற்றும் ஜூலை 18, 2025 ஆகிய தேதிகளிலும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மூன்றாவது நாளாக அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Jul 2025 09:43 AM

மியான்மர், ஜூலை 19 : மியான்மரில் (Myanmar) இன்று (ஜூலை 19, 2025) அதிகாலை 3.26 மணிக்கு நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மியான்மரில் ஜூலை 17, 2025 மற்றும் ஜுலை 18, 2025 ஆகிய தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவ்வாறு அங்கு தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், மியான்மரின் மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மியான்மரில் மூன்றாவது நாளாக நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (ஜூலை 19, 2025) அதிகாலை சரியாக 3.26 மணிக்கு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 105 கிலோ மீட்டர் ஆழம் கொண்டதாக இருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மளமளவென பற்றி எரிந்த வணிக வளாகம்.. 60 பேர் பரிதாப பலி.. ஈராக்கில் துயர சம்பவம்!

மியான்மரில் 3.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்பட்ட நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

மியான்மரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜூலை 17, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 80 கிலோ கீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோல நேற்று (ஜூலை 18, 2025) அன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது நேற்று மாலை சரியாக 3 மணி அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 110 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று (ஜூலை 19, 2025) மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மியான்மரில் தொடர்ந்து மூன்றாவது நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும், அது ரிக்டர் அளவில் குறைவானதாக உள்ள நிலையில், எந்த வித பெரிய சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.