ஆஸ்திரேலியா சாலைகளில் படையெடுக்கும் சிவப்பு நண்டுகள்.. காரணம் என்ன?

Red Crab Migration in Australia | ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் அதிக அளவிலான சிவப்பு நிற நண்டுகள் இருக்கின்றன. இந்த நண்டுகள் தங்களின் இனப்பெருக்க காலத்தின் போது தீவில் இருந்து வெளியேறி கடலுக்கு செல்லும். அந்த வகையில் தற்போது அந்த நண்டுகளின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா சாலைகளில் படையெடுக்கும்  சிவப்பு நண்டுகள்.. காரணம் என்ன?

சிவப்பு நண்டுகள்

Updated On: 

25 Oct 2025 08:48 AM

 IST

சிட்னி, அக்டோபர் 25 : ஆஸ்திரேலியாவின் (Australia) கிறிஸ்துமஸ் தீவில் (Christmas Island) உள்ள தேசிய பூங்காவில் சிவப்பு நண்டுகளின் படையெடுப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நண்டுகள் தீவில் உள்ள காட்டு பகுதியில் குழிகளை தோண்டி அதற்குள் வசிக்கும். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் இந்த நண்டுகளின் இனப்பெருக்க செய்ய தொடங்கும். இதன் காரணமாக அவை இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தீவில் இருந்து வெளியேறி கடலை நோக்கி படையெடுக்கும். தற்போது இந்த சிவப்பு நண்டுகளின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ள நிலையில், அவை தீவில் இருந்து வெளியேறி கடலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன.

கடற்கரையில் இனப்பெருக்கம் செய்யும் சிவப்பு நண்டுகள்

இந்த சிவப்பு நண்டுகளில் ஆண் நண்டு கடற்கரையில் குழிகளை தோண்டும். அவற்றில் முட்டை இடும் பெண் நண்டு சுமார் 2 வாரங்கள் வரை அடை காக்கும். முட்டையில் இருந்து வெளியேறும் குட்டி நண்டுகள் நேராக கடலுக்கு செல்லும். அங்கு ஒரு மாத காலம் வாழ்ந்த பிறகு மீண்டும் இந்த இளம் நண்டுகள் கிறிஸ்துமஸ் தீவை நோக்கி படயெடுக்கும். இந்த இனப்பெருக்க காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், லட்சக்கணக்கான நண்டுகள் தீவில் இருந்து கடற்கரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சாலை முழுவதும் நண்டுகள் நிறைந்துள்ள நிலையில், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒரே நாளில் இரண்டு முறை பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

சாலைகளை ஆக்கிரமிக்கும் சிவப்பு நண்டுகள்

இது குறித்து கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தேசிய பூங்காவின் இயக்குனர் அலெக்ஸா கூறுகையில்,  ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த பயணத்திற்கு தங்களால் முடிந்த அளவு சாலைகளை போக்குவரத்து இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனர். இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்கு தொல்லையாக இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.