மே 31 வரை இஸ்ரேலுக்கு விமான சேவை ரத்து.. ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

Air India Cancelled Its Flights To Israel | மத்திய கிழக்கு போர் காரணமாக உலக நாடுகள் தங்களது விமான போக்குவரத்தில் மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த வகையில், இஸ்ரேலுக்கான விமான சேவையை மே 31, 2026 வரை நிறுத்த உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

மே 31 வரை இஸ்ரேலுக்கு விமான சேவை ரத்து.. ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Apr 2026 07:28 AM

 IST

புது டெல்லி, ஏப்ரல் 06 : இஸ்ரேல் (Israel), அமெரிக்கா (America) மற்றும் ஈரான் (Iran) இடையே நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச விமான சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இந்திய விமான சேவை நிறுவனங்கள், தங்களது விமான சேவைகளில் மாற்றம் செய்துள்ளன. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கான விமான சேவையை முழுவதுமாக நிறுத்தியுள்ளன. அந்த வகையில், ஒரு மாத காலத்திற்கு இரேலுக்கு விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா (Air India) நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போரால் விமான சேவை பாதிப்பு

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கான ஏர் இந்தியா விமான சேவை ஒரு மாத காலம் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கூறியுள்ள அதிகாரி ஒருவர், புது டெல்லி – டெல் அவிவ் வழித்தடத்தில் மே 31, 2026 வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். இது இஸ்ரேலில் வசிக்கும் இந்திய பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 2 அல்லது 3 வாரங்களில் போர் முடியும்.. ஈரான் தாக்குதல் குறித்து அதிபர் ட்ரம்ப் சொன்ன தகவல்

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விமான சேவை வழங்கும் இஸ்ரேல்

இத்தகைய பதற்றமான சூழலில், கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் மட்டுமே தொடர்ந்து விமான சேவை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஏர் இந்தியா, இஸ்ரேலுக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது, அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இஸ்ரேலை விட்டு வெளியேற நினைக்கும் இந்தியர்கள், தரைவழியாக ஜோர்டன் அலல்து எகிப்து நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதையும் படிங்க : ஈரான் நடத்திய தாக்குதல்.. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

இவ்வாறு பயணம் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படுவது மட்டுமன்றி, அதிக பணமும் செலவாகும். இதன் காரணமாக இஸ்ரேலில் வசிக்கும் இந்திய பொதுமக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்