இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 29 பேர் காயம்!

Indonesia Earthquake | இந்தோனேசியாவில் இன்று (ஆகஸ்ட் 18, 2025) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சற்று கடுமையானதாக இருந்த நிலையில், அங்கு சில பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 29 பேர் காயம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Aug 2025 08:37 AM

ஜகார்த்தா, ஆகஸ்ட் 18 : இந்தோனேசியாவில் (Indonesia) நேற்று (ஆகஸ்ட் 17, 2025)  சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சற்று கடுமையானதாக இருந்த நிலையில், அங்கு பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், அங்கு மீட்பு படையினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவின் அண்டை நாடான இந்தோனேசியாவில் நேற்று (ஆகஸ்ட் 17, 2025) சக்தியாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. போசோ மாவட்டத்துக்கு வடக்கே சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சற்று கடுமையான நிலநடுக்கமாக உள்ளது.

இதையும் படிங்க : துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஒருவர் உயிரிழப்பு..

இந்தோனேசியாவை உலுக்கிய கடுமையான நிலநடுக்கம்

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 17, 2025) அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்படுட்டுள்ளது. இந்த தொடர் நில அதிர்வுகள் காரணமாக அங்குள்ள வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கி 29 பேர் காயமடைந்துள்ளனர்.

விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளும் மீட்பு படையினர்

நிலநடுக்கத்தால் காயமனவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களிடையே சற்று பதற்றம் நிலவுகிறது.