‘தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள்’ லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM MK Stalin London Visit : முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகள் சென்றார். எட்டு நாட்களாக பயணமாக சென்ற முதல்வர் ஸ்டாலின், 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான நாளை சென்னை வருகை தருகிறார். இதற்கிடையில், 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று லண்டனில் நடந்த தமிழ்க் கனவில் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
சென்னை, செப்டம்பர் 07 : முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகள் சென்றார். எட்டு நாட்களாக பயணமாக சென்ற முதல்வர் ஸ்டாலின், 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான நாளை சென்னை வருகை தருகிறார். இதற்கிடையில், 2025 செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று லண்டனில் நடந்த தமிழ்க் கனவில் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது, ”ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்திருக்கின்ற உங்கள் எல்லோரையும் பார்க்கின்ற போது எல்லையில்லா மகிழ்ச்சி. மிக மிக எளிய பின்புலங்களில் இருந்து, படித்து முன்னேறி, இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடுமையான உழைப்பாளிகள் என்று அயலக மண்ணில் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்” எனக் கூறினார்.
Published on: Sep 07, 2025 01:38 PM
Latest Videos