ஒடிசாவில் பலத்த மழை.. இன்னும் 5 நாட்களுக்கு தொடரும்!

| Edited By: C Murugadoss

| Jul 24, 2025 | 1:31 PM

Odissa Heavy Rains : ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா, ஜூலை 23 :   ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை 2025 ஜூலை 28ஆம் தேதி வரை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published on: Jul 23, 2025 10:19 PM