Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கர்நாடகாவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - ரூ.11 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்

கர்நாடகாவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது – ரூ.11 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்

Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Jul 2025 22:35 PM

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி நகரத்தில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கலபுரகி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு, கலபுரகி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி நகரத்தில், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கலபுரகி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு, கலபுரகி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மல்கேதா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும், கர்நாடகா மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டவர் எனவும் தெரியவந்தது.

இந்த கைது நடவடிக்கையில், போலீசார் அவரிடமிருந்து 123 கிராம் மதிப்பிலான தங்க நகையை  பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.11.07 லட்சம் என்று கூறப்படுகிறது. திருடப்பட்ட பொருட்களில் நகைகள் மட்டுமின்றி ஸ்மார்ட்போன்களையும் அவரிடம் இருந்து கைப்பற்றியிருக்கின்றனர்.