Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ரூ.2.16 கோடி மதிப்பிலான சட்டவிரோத இருமல் மருந்துகள் பறிமுதல்

ரூ.2.16 கோடி மதிப்பிலான சட்டவிரோத இருமல் மருந்துகள் பறிமுதல்

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Oct 2025 15:50 PM IST

அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் ரூ.2.16 கோடி மதிப்புள்ள 21,600 சட்டவிரோத இருமல் மருந்து பாட்டில்களை அசாம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சில்சார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோங்பூரில், கச்சார் காவல்துறை சோதனையிட்டதில், 21,600 சட்டவிரோத இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அசாம், அக்டோபர் 10 :  அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் ரூ.2.16 கோடி மதிப்புள்ள 21,600 சட்டவிரோத இருமல் மருந்து பாட்டில்களை அசாம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சில்சார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோங்பூரில், கச்சார் காவல்துறை சோதனையிட்டதில், 21,600 சட்டவிரோத இருமல் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. 

Published on: Oct 10, 2025 03:49 PM