திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது.. வில்லிவாக்கத்தில் அண்ணாமலை பேச்சு!

Apr 21, 2026 | 1:20 PM

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டின் அனைத்து இடத்திலும் திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது. அதிமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டுமென மக்கள் கேட்கிறார்கள். மேலும், சென்னையில் காலி இடம் இருந்தால் அதை பட்டா போட்டு ஜி ஸ்கொயருக்கு திமுக விற்று விடுகிறது. வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 2014 தேர்தலில் தயாநிதி மாறனை வீழ்த்தியவர், அவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் வில்லிவாக்கம் மக்களுக்கு தேவையானதை செய்வதோடு , மக்களோடு இருப்பார்” என கூறினார். தொடர்ந்து, தவெகவின் ஆதவ் அர்ஜுனா காலை முதல் மாலை வரை பொய் மட்டுமே பேசுவார் எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டின் அனைத்து இடத்திலும் திமுக ஆட்சி ஒழிய வேண்டும் என்ற குரலே கேட்கிறது. அதிமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டுமென மக்கள் கேட்கிறார்கள். மேலும், சென்னையில் காலி இடம் இருந்தால் அதை பட்டா போட்டு ஜி ஸ்கொயருக்கு திமுக விற்று விடுகிறது. வில்லிவாக்கம் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 2014 தேர்தலில் தயாநிதி மாறனை வீழ்த்தியவர், அவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் வில்லிவாக்கம் மக்களுக்கு தேவையானதை செய்வதோடு , மக்களோடு இருப்பார்” என கூறினார். தொடர்ந்து, தவெகவின் ஆதவ் அர்ஜுனா காலை முதல் மாலை வரை பொய் மட்டுமே பேசுவார் எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.

Follow Us