பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்…கரும்பு ரூ.700க்கு விற்பனை..

Jan 14, 2026 | 8:46 PM

தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை ( ஜனவரி 15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆரம்பத்தில் ஒரு கட்டு கரும்பு ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை ( ஜனவரி 15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆரம்பத்தில் ஒரு கட்டு கரும்பு ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாங்கள் தற்போது கடந்த 3 நாட்களாக இங்கு தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறோம். பொதுமக்கள் ஆர்வமுடன் கரும்புகளை வாங்கி செல்கின்றனர் என்று தெரிவித்தார்.