போகி பண்டிகை.. சென்னையில் விமான சேவை ரத்து..
போகி பண்டிகையையொட்டி, சென்னையில் அதிகாலை பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்தனர். இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் புகைமூட்டம் எழுந்தது. புகைமூட்டத்துடன், பனிமூட்டமும் இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதாவது, கொச்சி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 8 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.