குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் – வைரல் வீடியோ
Kung fu in action : ஸ்பெயின் நாட்டில் புகைப்பட கலைஞரான சீனப் பயணியிடம் இருந்து திருடன் ஒருவன் கேமராவை திருட முயன்றிருக்கிறார். இதனைப் பார்த்த சீன பயணி குங்ஃபூ டெக்னிக்கை பயன்படுத்தி திருடனை வீழ்த்தியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் (Spain) நாட்டில் உள்ள பார்செலோனா நகரில் சீன (China) பயணி ஒருவர் தன்னுடைய கேமரா திருடப்படுவதைத் தடுப்பதற்காக குங்ஃபூ (Kung Fu) முறையை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வைரலானார். இந்த சம்பவம் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் பார்சிலோனா நகரிலுள்ள நடைபாதையில் நடந்தது. அங்கு சில பயணிகள் இந்த நிகழ்வை கேமராவில் பதிவுசெய்தனர். அந்த சீன பயணி, கேமராவை திருட முயன்ற மர்ம நபரை “நெக் சோக்” என்ற குங்ஃபூ படைப்பு முறையை பயன்படுத்தி தாக்கி திருட்டை தடுத்தார். குங்ஃபூவில் இது ஒரு வகை தற்காப்பு முறையாகும். இதில் உடலில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி, மூளைச் செயல்பாட்டை தடை செய்யும் என்று கூறப்படுகிறது.
இந்த டெக்னிக் தற்காப்பு கலைகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது, குறிப்பாக அவசரமான சூழ்நிலைகளில் நம்மை தற்காத்துக்கொள்ள இந்த டெக்னிக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையை பயன்படுத்தி அந்த சீன பயணி திருடனை நிலை குலையச் செய்திருக்கிறார். அதற்கு பிறகு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து திருடனை கைது செய்தனர்.
குங்ஃபூ மூலம் திருடனை வீழ்த்திய சீன பயணி
🇨🇳 🇪🇸 A foreign thief in Barcelona tried to steal a Chinese photographer’s camera.
In the spirit of cultural exchange, he showed him a Chinese martial arts trick until the police arrived to take him away. pic.twitter.com/bpjs4qnxD9
— Dott. Orikron 🇵🇹 (@orikron) April 30, 2025
குங்ஃபூ என்பது ஒரு பாரம்பரிய சீன கலை மற்றும் தற்காப்பு முறையாகும், இது பல்வேறு தற்காப்பு நுட்பங்களை கொண்டுள்ளது. குங்ஃபூ முறையில் முக்கியமானது தனது உடல் திறன்களை முழுமையாக பயன்படுத்தி மூலம் தற்காப்பு செய்வது. இது திடீர் பரபரப்பை சமாளிக்க, அவசர சூழ்நிலைகளில் விரைவாக செயல்பட உதவுகிறது. இந்த கலை, திருடர்களிடம் இருந்தோ அல்லது நம்மை தாக்க முயல்பவர்களிடமிருந்தோ பாதிக்கப்படும்போது உடலின் சக்தி, வேகம், மற்றும் நேரத்தை சரியாக பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தி கடுமையான சூழ்நிலைகளில் பாதுகாப்பு பெற உதவுகிறது. இதன் மூலம், ஒருவர் தங்களை மட்டுமல்லாமல் பிறரை பாதுகாக்க முடியும்.
உண்மையில் நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில் புகைப்படக் கலைஞரான அந்த சீன பயணி பார்செலோனாவில் சுற்றுலா வந்தவர்களிடம் புகைப்படங்களை எடுத்து தருகிறார். இந்த நிலையில் திருடன் அவரது கேமராவை திருட முயன்றிருக்கிறார். இதனை கவனித்த சீன பயணி சற்றும் தாமதிக்காமல் அந்த திருடனை குங்ஃபூ முறையில் தாக்கி தரையில் படுக்க வைத்தார். இதனை ஆச்சரியத்துடன் சுற்றுலா பயணிகள் அதனை வீடியோ எடுத்தனர். பின்னர் சீனப் பயணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த உள்ளூர் காவல்துறையினர், மொசோஸ் டி எஸ்குவாட்ரா என்ற அந்த குற்றவாளியை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு, அந்த சீன பயணியின் தற்காப்பு திறன்களுக்கு பெரும் கவனம் பெற்றது. இத்தகைய தற்காப்பு முறைகள், நம் வாழ்கையில் பாதுகாப்பு பெறவும், அவசரமான சூழ்நிலைகளில் எதிர்வினைகள் காட்டி உயிர்காக்கவும் உதவுகின்றன.