AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video: புல்லாங்குழல் இசை.. விமான நிலையத்தில் மாஸ் காட்டிய நபர்!

Airport flute performance : ராய்ப்பூர் விமான நிலையத்தில் ஒரு ராஜஸ்தானி இசைக்கலைஞர் தனது புல்லாங்குழல் இசையால் அனைவரையும் கவர்ந்த வீடியோ இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அக்ஷய் குமாரின் தெரி மிட்டி பாடலை இசைத்த அவரது திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Viral Video: புல்லாங்குழல் இசை.. விமான நிலையத்தில் மாஸ் காட்டிய நபர்!
வைரல் வீடியோ
Barath Murugan
Barath Murugan | Published: 26 May 2025 22:22 PM IST

இசை என்றால் பலருக்கும் பிடிக்கும், தங்களின் ஸ்டெரஸ்  அளவை (Stress level) குறைப்பதாகப் பலரும் கூறிவருகின்றனர். இசை ஒரு மனிதனை மிகவும் சந்தோஷமாக வைக்கும் என்று பலரும் கூறுகின்றனர். அந்த வகையில் ராய்பூர் விமான நிலையத்தில் (Raipur Airport)  பிரபல ராஜஸ்தானி இசைக்கலைஞர் (Rajasthani musician) ஒருவர் தனது புல்லாங்குழல் இசையின்  (Flute music) மூலம் ஒட்டுமொத்த விமான நிலையத்தையும் கவர்ந்துள்ளார். அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பயனர்களைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான்  இடையே போர் பதற்றம் நடந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்தில் எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு இது ஒரு ஆனந்தமான தருணமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அந்த இசைக்கலைஞர் அக்ஷய் குமாரின் கேசரி படத்தில் இருந்து வெளியான “தெரி மிட்டி” என்ற பாடலை தனது புல்லாங்குழல் மூலம் இசையாகப் பாடியுள்ளார்.

இந்த பாடல் விமானநிலையத்தில் பணிபுரியும் ராணுவ அதிகாரிகளுக்காகப் பாடியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி சில வாரங்களாக நிலையில், தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் தீயாகிப் பரவி வருகிறது. ராணுவ அதிகாரிகளுக்காகப் பிரபல ராஜஸ்தானிய இசைக்கலைஞர் தனது புல்லாங்குழல் மூலம் பாடி அசத்திய வீடியோ இதுவரைக்கும் சுமார் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் பலரும் இந்த வீடிவோவிற்கு லைக் செய்து வருகின்றனர்.

இணையவாசிகளை கவரும் அந்த வீடியோ :

இந்த வீடியோவில், ராஜஸ்தானி இசைக்கலைஞர் ஒருவர் ராய்பூர் விமான நிலையத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அவர் விமான நிலையத்தில் பேக் பரிசோதனையில் ஈடுபடும்போது இதைச் செய்துள்ளார். அவர் கொண்டுவந்த பேக்கிலும் முழுவதுமாக புல்லாங்குழல்கள் இருந்துள்ளது. அதை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனை செய்யும்போதுதான் இந்த கலைஞர் இதை செய்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் பரபரப்பான சூழ்நிலையிலிருந்த நிலையில், மீண்டும் இந்த வீடியோ அதனை தணிக்கும் வகையில் அமைந்துள்ளது . தற்போது இந்த வீடியோவானது மில்லியன் பார்வைகளைக் கடந்து, ட்ரெண்டிங் ஆகிவருகிறது. மேலும் இந்த வீடியோவின் கீழ் பயனர்கள் பலரும் கருத்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தது வருகின்றனர். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு சில கருத்துக்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த வீடியோவில் முதல் பயனர் ஒருவர் “இந்தியாவைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும் இசையை ரசிக்காத நபரே இருக்க முடியாது, அது போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இந்த இசைக்கலைஞர் பாடிய பாடலானது மிகவும் அருமையாக இருக்கிறது, நிச்சயமாக அந்த விமான நிலையத்தில் நான் இருந்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Follow Us